இங்கிலீஷ் விங்கிலீஷ் பாகம் 2 ல் ஸ்ரீதேவி


பழைய நடிகை ஸ்ரீதேவி நீண்டஇடைவெளிக்கு பிறகு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வயதானாலும் ஸ்ரீதேவியின் நடிப்பு திறமை மாறவில்லை என்று பலரும் பாராட்டினர். இந்த படத்துக்கு பிறகு ஸ்ரீதேவிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. இயக்குனர்கள் ஸ்ரீதேவியை முற்றுகையிட்டு அவர் வயதுக்கு ஏற்ற கதை இருப்பதாக சொல்லி நடிக்க அழைத்தனர். இந்த பட்டியலில் ஸ்ரீதேவி கணவர்
போனிகபூரும் உள்ளார். அவர் தயாரிக்கும் படமொன்றில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சிக்கிறார். 

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தை இயக்கிய கவுரி ஷிண்டே அதன் 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளார். அதிலும் ஸ்ரீதேவியே நடிக்க வேண்டும் என்று வேண்டி அணுகியுள்ளார். இவர்களில் யார் படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறேன் என்றார் ஸ்ரீதேவி. ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ 2-ம் பாகத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்