இன்றைய கால கட்டத்தில் எந்தவொரு நடவடிக்கையும் கணினிமயப் படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றின் அடிப்படையில் புதிதாக வெளியிடும் பல்வேறு புத்தகங்களும் அச்சிட்டு வெளியிடுவதை குறைத்து கணினியில் பயன்படுத்தக் கூடியவாறு மின் புத்தகங்களாகவே (eBook) வெளியிடப்படுகின்றது. அதே போல அச்சுப் பதிப்புக்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களினையும் ஸ்கேன் செய்து மின் புத்தகங்களை உருவாக்க முடியும். இதற்கென iReador eBook Converter எனும்
மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இவை நிழற்படங்களாகவோ அல்லது எழுத்துருக்களாகவே ஸ்கான் செய்யப்பட்ட கோப்புக்களை PDF, ePUB, Mobi போன்ற மின்புத்தக கோப்புக்களாக மாற்றியமைக்க உதவுகின்றது.
இதன் பயனர் இடைமுகமானது எளிமையானதாகக் காணப்படுவதால் பயன்படுத்துவது இலகுவாக அமைந்துள்ளது.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:34.42MB |