கும்கியைத் தொடர்ந்து, டைரக்டர் லிங்குசாமி, "இவன் வேற மாதிரி, டும் டும் பீபீ என, இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதில், "டும் டும் பீபீ படத்தில், சித்தார்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக நித்யாமேனன் நடிக்கிறார். தான் தமிழில் நடிக்கும் பிரமாண்ட காதல் படம் என்பதால், இப்படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் சமந்தா, படப்பிடிப்பின் போது, மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வருகிறாராம். "மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் படங்களில்
நடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, அதுபோன்ற நல்ல வாய்ப்புகளை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக, அடுத்தடுத்த படங்களில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளேன் என, கூறும் சமந்தா, " தெலுங்கில் நானும், சித்தார்த்தும் நடித்து, பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நாங்கள் ராசியான ஜோடியாக புகழப்படுகிறோம். எங்களின் வெற்றிப் பட வரிசையில், இந்த படமும் சேரும் என்கிறார்.