சில்க் ஸ்மிதாவும் லியாஸ்ரீயும் சிறப்பு பேட்டி


துள்ளி ஓடும் புள்ளிமானின் மிரளும் கண்கள், வில்லாய் வளைந்த புருவம், பிறை நிலா நெற்றி, குடை மிளகாய் மூக்கு, மதுகிண்ண கன்னங்கள், முத்துப் பற்கள், மாதுளை இதழ்கள், அதில் தேனூறும் வர்ணம், கார்மேகக்கூந்தல், சந்தன மேனிக்கு அழகு சேர்க்கும் "எடுப்பான தோற்றம், என கிராமத்து மின்னலாய் மின்னும் திரை நட்சத்திரம் லியாஸ்ரீ.

கர்நாடகாவில் இருந்து கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவர். இவரது முதல் படம் ஜெயம் ரவி நடித்த "பேராண்மை, இந்த வெற்றியை அடுத்து "ஏதோ செய்தாய் என்னை என்ற படத்தில் ஹீரோயின். இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, இப்படத்தின் ஹீரோ. இப்படம் தெலுங்கில் சக்கை போடு போட்டது. இதையடுத்து கோலிவுட்டில் லியாஸ்ரீ பிசி. மதுரையில் "கன்னியரும், காளையரும் பட ஷூட்டிங்கில், "நூலிழை கேப்பில், கிடைத்த கொஞ்ச நேரத்திலும் நமது கேள்விகளுக்கு கொஞ்சலோடு பதிலளித்தார்.

* சிம்ரன் போல் இன்றைய நடிகைகளின் இடுப்பு இல்லையே?

 அவரவர் உடல் அமைப்புக்கு ஏற்ப ரசிகர்களின் ஆரவாரம் இருக்கும். சில்க் ஸ்மிதா கிளாமர் யாருக்கு வரும்?

* இழுத்துப்போர்த்தி கொண்டு நடித்தால் எதிர்காலம் இருக்காதோ?

 யார் சொன்னது? நல்ல கதை, கதாபாத்திரம், இயக்குனர் அமைந்தால் பீல்டில் நிலைக்கலாம்.

* சினிமாவில் கிளாமர் தேவைதானா?

அவசியம் இல்லைதான். இருந்தாலும்,  கதைக்கு தேவையெனில் கிளாமரும் தேவை தான்.

* கிளாமர் விஷயத்தில் நீங்க... சைவமா? அசைவமா?

"கிளாமர்லாம் ஒரு விஷயமே இல்ல. என்னை பொறுத்தவரை கதாபாத்திரத்தை பொறுத்து கிளாமரும் இருக்கும்.

* உங்களின் ரோல் மாடல் யார்?

இந்தி நடிகை மாதுரி தீட்சித். அவரது டான்ஸ், நடிப்பு பிடிக்கும்.

* எதிர்கால திட்டம்?

நல்ல நடிகையாக வரணும்.

* உங்களுக்கு பிடித்த டைரக்டர்?

பேராண்மை படத்தை இயக்கிய "ஜெனா (ஜெகநாதன்) 

* ஏன் இந்த (கன்னியரும், காளையரும்) பட இயக்குனர் ராசுமதுரவனை பிடிக்காதா?

ஐய்யய்யோ... எல்லா இயக்குனரையும் எனக்கு பிடிக்கும். உங்களையும் எனக்கு பிடிக்கும், என நம்மை "ஜொள்ளு விட வைத்த லியாஸ்ரீ, "ஐ ஆம் கம்மிங் என ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஓட்டம் பிடித்தார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget