குடும்ப குத்து விளக்கான அஞ்சலி, சிங்கம்-2 படத்தில் குத்து நடிகையாகவும் அவதரித்துள்ளார். ஆனால் இப்படி அவர் நடிப்பதற்கு காரணம், தெலுங்கு படங்களில் நடித்ததுதானாம். 2006ம் ஆண்டு தாய்மொழியான தெலுங்கு சினிமாவில்தான் அறிமுகமானார் அஞ்சலி. ஆனால் நடித்த படங்களின் தோல்வி அவரை அங்கிருந்து விரட்டியடித்து விட்டது. அப்படி தமிழுக்கு வந்து கற்றது தமிழ், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் ஹோம்லியாக நடித்ததால் அஞ்சலிக்கு நல்லதொரு இமேஜ் உருவானது.
ஆனால் கலகலப்பு படத்தில் கவர்ச்சி நாயகியாக அவதரித்ததால், மீண்டும் அஞ்சலிக்கு தெலுங்கு சினிமா சிவப்பு கம்பளம் விரித்தது. அதனால் அங்கு தற்போது வெங்கடேஷ், ரவிதேஜா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் கதாநாயகி என்றாலும், தமிழில் அயிட்டம் பாடல்களுக்கு ஆடும் நடிகைகள் போன்றுதான் நடித்திருக்கிறாராம் அஞ்சலி. அதன்காரணமாகத்தான், சிங்கம்-2 படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடவேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது உடனே சம்மதம் சொல்லி விட்டேன் என்று சொல்லும் அவர், இனி நான் இமேஜ் பற்றி கவலைப்படப்போவதில்லை. நல்ல கதை, நல்ல யூனிட் என்று தெரிந்தால் எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிப்பேன் என்கிறார்.