இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகளுக்கு கூட அறிவியல் மற்றும் டெக்னாலஜி பற்றிய அறிவு அதிகம் உள்ளது. இத்தகைய முன்னேற்ற இருந்தாலும், நம்மால் ஒரு சில நோய்களுக்கு சரியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றோம். இந்த மாதிரி முற்றிலும் குணப்படுத்த முடியாத நோயால், தற்போது அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டிருப்பதோடு, பலர் அந்த நோய்களால் உயிரையே விட்டுள்ளனர். எப்போது ஒரு நோய் உடலுக்கு வந்து, அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாமல் இருக்கிறதோ, அதனைத் தான் உயிர் கொல்லி நோய் என்று சொல்வோம். சில நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஒருசில மருந்துகள் மூலம் அதனை தற்காலிகமாக தடுக்கலாம். உதாரணமாக, வயிற்றில் ஏதேனும் ஒரு தொற்றுநோய் வந்து, அதற்கு ஆன்டிபயாட்டிக் எடுத்தால், அந்த நோய் மூன்று நாட்களில் குணமாகிவிடும். ஏனெனில் வயிற்றில் உள்ள காயம் சரியாவதற்கு சற்று காலம் ஆகும். ஆனால் முற்றிலும் சரியாகிவிடும். ஆனால் அதுவே வைரஸ் உடலில் புகுந்து சளி, இருமல் போன்றவை ஏற்பட்டு, அவை அதிகரித்தால், அப்போது அதனை தடுக்க மருந்துகள் எடுத்தாலும், அந்த வைரஸ்கள் உடலில் தங்கியிருக்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. பொதுவாக வைரஸ் நோய்களை குணப்படுத்துவது தான் மிகவும் கடினம். சொல்லப்போனால் பெரும்பாலான குணப்படுத்த முடியாத நோய்களை ஏற்படுத்துவது வைரஸ்கள் தான். மேலும் எத்தனையோ நவீன சிகிச்சைகள் இருப்பினும், ஒரு சில நோய்களை தற்காலிகமாகத் தான் குணப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணமாகிவிட்டது என்று கூற முடியாது. இப்போது அந்த மாதிரியான நோய்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
எய்ட்ஸ் : மக்கள் எய்ட்ஸ் என்றாலோ பயப்படுகின்றனர். ஏனெனில் இது குணப்படுத்த முடியாத ஒரு உயிர் கொல்லி நோய். இந்த நோய் வராமல் இருக்க வேண்டுமெனில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நோய் இரத்தத்தின் மூலமும், உடலுறவின் மூலமும் பரவக்கூடியது.
புற்றுநோய் : புற்றுநோயை குணப்படுத்த எத்தனையோ சிகிச்சைகள் இருக்கின்றன. இருப்பினும், இந்த சிகிச்சையால் புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது என்று நிரூபிக்க முடியவில்லை. சிலருக்கு ஹீமோதெராபி, சர்ஜரி போன்றவற்றின் மூலம் வாழ்நாளின் அளவை நீட்டிக்க முடியுமே தவிர, இதனை முற்றிலும் சரிசெய்ய முடியும் என்று கூற முடியாது.
போலியோ : போலியோவிற்கு எத்தனையோ தடுப்பூசிகள் இருப்பினும், போலியோவை உண்டாக்கும் போலியோ வைரஸ் உடலில் வந்துவிட்டால், அதனை குணப்படுத்துவது கடினமானது. இதனால் கால்கள் இயங்காமல் போவதோடு, உடலின் சில பாகங்களும் பாதிக்கப்படும். இந்த போலியோ எந்த வயதிலும் வரக்கூடியது.
மூட்டுவாத நோய் : ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாத நோய், பெரும்பாலும் மூட்டுகள் இணையும் இடங்களில் ஏற்படும். அந்த நோய் வந்தால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரிக்கும். சிலருக்கு இந்த நோய் குழந்தைப் பருவத்தில் இருந்து கூட இருக்கும். இந்த நோய்க்கு இதுவரை எந்த ஒரு சரியான முடிவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வேண்டுமெனில் இந்த நோயால் ஏற்படும் வலியை மட்டும் தான் தடுப்பதற்கு மருந்து உள்ளது.
இருமல் : சாதாரண இருமலும் சரிசெய்ய முடியாத நோய்களில் ஒன்றாகும். அதிலும் இந்த இருமல் வந்தால், மூன்று நாட்கள் இருந்து, மூன்று நாட்களில் சென்றுவிடும். குறிப்பான இந்த மருந்தை குடித்தால், இருமலை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று சொல்லவே முடியாது.
இன்புளுயன்சா/ஃப்ளு : இருமல் அளவுக்கு அதிகமாக இருந்தால் உண்டாவது தான் இன்புளுயன்சா. இந்த நோய் வந்தால், நுரையீரல் நீரால் முற்றிலும் நிரம்பியிருக்கும். இந்த இன்புளுயன்சா எனப்படும் ஃப்ளுவில் பன்றிக் காய்ச்சல் (swine flu) மற்றும் பறவைக் காய்ச்சல் (bird flu) என்பன இருக்கின்றன. இவை மிகவும் கொடிய நோய்களுள் ஒன்று. ஏனெல் இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் தொடர்ந்து, இந்த நோயை முற்ற வைத்து, உயிருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆஸ்துமா : ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு நோய். இதற்கு எந்த ஒரு நவீன மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை. இதனை தற்காலிகமாக சமாளிக்க அஸ்தலின் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, சுவாச உடற்பயிற்சியின் மூலம் சரிசெய்துவிடலாம் என்று நினைப்போம். ஆனால் இவற்றால் ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த முடியாது. எந்த நேரத்திலும் அவை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு : நீரிழிவை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த நோய் எவ்வளவு ஆபத்தானது என்று தெரியும். குறிப்பாக இந்த நோயின் ஸ்பெஷல் என்னவென்றால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது. இந்த நோய் முற்றினால், உடலில் உள்ள பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகத்திலிருந்து அழிய ஆரம்பிக்கும்.
எபோலா : அந்த நோயின் போது கடுமையான காய்ச்சல் இருக்கும். இந்த நோயால் ஆப்ரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய எபோலா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸை அழிக்க ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவற்றிற்கான சரியான தீர்வு கிடைக்கவில்லை.
க்ரூட்ஸ்ஃபெல்ட் ஜாக்கோப் நோய் : இது மூளைச் செல்கள் மற்றும் மைய நரம்பு மண்டலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இது ஒரு பாரம்பரிய நோயுடன் தொடர்புடையது. ஆனால் இதனை சரிசெய்ய எந்த ஒரு மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.