புதிய தேடு பொறியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்

நேற்று கலிபோர்னியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல் அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க் ‘கிராஃப் சர்ச்’ என்றழைக்கப்படும் தேடுபொறியை அறிமுகப்படுத்தினார். இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய சேவையாகும். முடிவடையும் தருவாயிலுள்ள இந்த ஃபேஸ்புக் தேடுபொறியானது இன்னும் சில தினங்களில் அனைவரின் பயன்பாட்டிற்கும் கிடைக்குமென தெரிகிறது. இது கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக வெளியிடப்படுகிறதென பல்வேறு
கருத்துகள் வெளியிடப்படும் நிலையில் இது என்ன? எப்படி பயன்படுத்தலாம்? என்பது போன்ற தகவல்களை அறிய இந்த பதிவு உபயோகமாக இருக்கும்

1) ஃபேஸ்புக் ‘கிராஃப் சர்ச்’ என்றால் என்ன?
இதுவொரு தேடுபொறி. இது ஃபேஸ்புக்கின் உள்ளேயே தேட பயன்படும் புதிய சேவையாகும். ஏற்கெனவே உள்ளதல்லவா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த சேவை முற்றிலும் வேறு விதமானது. ஃபேஸ்புக் பக்கத்தின் உள்ளே இருந்தே எதை வேண்டுமானாலும் தேடலாம் என்கிறது ஃபேஸ்புக்.

இது உங்களுடைய நண்பர்கள், அவர்களுடைய படங்கள், அவர்களுக்கு பிடித்தவை மற்றும் உங்களையும் பொறுத்தே அமையும். இது நமது தேடலை சுலபமாக்குகிறது எனலாம். இதை பாருங்கள்.

2) எதுக்கு ‘கிராஃப் சர்ச்’? நானென்ன கிராஃப்பா தேடப்போறேன்?
இல்லை! ஆனால் ஆம்! அதாவது ஃபேஸ்புக் அனைத்து தரவுகளையும் ஒரு கிராஃப் போன்ற அமைப்பில்தான் சேமித்துள்ளது. இதனை பேஸ்புக் நிறுவனம் ‘சோசியல் கிராஃப்’ என்கிறது. எனவேதான் இந்த இந்த பெயராம்.

மேலும் இந்த தேடுதலானது சாதாரண தேடும் முறைக்கு மாற்றாக சில சிறப்பம்சம்களுடனே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேடும்பொழுது உங்கள் மொழிக்கேற்றவாறு தேடலாம் என்பது தனிச்சிறப்பு.

3) எப்படி வேலை செய்கிறது?
ஃபேஸ்புக் அறிவிப்பின்படி சாதாரண மொழியில் கூட தேட முடியும். நீங்கள் கிவோர்ட் என்ற வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த தேவையே இல்லை. உதாரணத்திற்கு “சென்னை நண்பர்களின் படங்கள்” என தேடினாலே அதற்கான பலன் கண்டிப்பாக சிறப்பாகவே இருக்குமாம்.

நீங்கள் தேடவேண்டியதை தட்டச்சு செய்தவுடன் கீழே ஒரு பெட்டி தோன்றி உங்களுக்கான பதிலை தரும்.

4) அப்போ ப்ரைவசி தகவல்கள்?
பயம் தேவையே இல்லை. நீங்கள் மறைத்துவைத்த அல்லது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் ஷேர் செய்த தகவல்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படாது. ப்ரைவசி பற்றி எந்த கவலையும் தேவையில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

5) எப்பொழுது பயன்படுத்தலாம்?
ஃபேஸ்புக் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் இது வெளியிடப்பட்டுமெனத்தேரிகிறது.

6) யார் பயன்படுத்தலாம்?
கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்தலாம்! ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள அனைவரும் இந்த சேவையை இலவசமாகவே பயன்படுத்தலாம்.

7) இந்த சேவையை எப்படிப்பெறுவது?
இப்பொழுது ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கான சோதனை முறையை ஆரம்பித்துள்ளது. நீங்கள் வேண்டுமானால் இங்கே சென்று உங்களுக்கான சேவையையும் பதிவு செய்யுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget