கமலின் பாணியில் ரஜினியும் டிடிஎச்சுக்கு மாறுகிறார்?

எதிலும் எப்போதும் விஷப்பரீட்சை செய்து பார்க்க தயங்காதவர் கமல். விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக படமாக்கியிருக்கும் அவர், அப்படத்தை டிடிஎச்சில் வெளியிடவும் முடிவெடுத்திருக்கிறார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், சினிமாத்துறையினர் அனைவருமே ஆதரவளித்து வருகின்றனர். அதோடு விஸ்வரூபத்தை அடுத்தபடியாக திரைக்கு வரவிருக்கும்
மேலும் சில படங்களையும் டிடிஎச்சில் வெளியிடும் முயற்சிகளும் திரைக்குப்பின்னால் நடக்கிறது.

குறிப்பாக, ரஜினி நடித்துள்ள கோச்சடையானையும் டிடிஎச்சில் வெளியிட பேசி வருகிறார்கள். அப்படமும் பிரமாண்ட பட்ஜெட் என்பது மட்டுமின்றி 3டி படம் என்பதால் சில தியேட்டர்களில் மட்டுமே வெளியிடும் வசதி உள்ளது. அதனால் அவரும் இந்த பாணிக்கு மாறினால்தான் படத்தின் வசூலை எடுக்க முடியும். இருப்பினும் இன்னும் ரஜினி இறுதி முடிவை சொல்லவில்லை. விஸ்வரூபத்தின் முடிவுக்காக காத்திருக்கிறார். இதையடுத்து பொங்கலுக்கு வெளியாகும், அலெக்ஸ்பாண்டியன், ஆதிபகவனையும் போன்ற படங்களையும் தாங்கள் வெளியிட டிடிஎச்காரர்கள் கேட்டு வருகின்றனர். இந்த செய்தி தியேட்டர் உரிமையாளர்களை மேலும் பேரதிர்ச்சிக்கு தள்ளியிருக்கிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget