கமலை பொறுமையாக இருக்கும்படி ரஜினி வேண்டுகோள்


விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார் கமல். சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியும் தடையை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் இதனை ‌எதிர்த்து மீண்டும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனிடையே காலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல், தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்று உருக்கமாக பேட்டியளித்தார். கமலின் இந்தபேட்டியை அடுத்து திரையுலகினர் பலரும் கமலை தொடர்ப்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் விஸ்வரூபம் படத்திற்கு முதலில் பிரச்னை எழுந்தபோது திரையுலகில் இருந்து முதல் ஆளாக குரல் கொடுத்தவர் அவரது திரையுலகின் நல்ல நண்பர் ரஜினி. கமலின் பேட்டியை பார்த்து உடனே கமலை தொடர்பு கொண்டு தான் வருவதாக கூறினார். ஆனால் கமல் தான் தற்போது வேண்டாம் என்று கூறியுள்ளார். இருந்தும் போனில் பேசிய ரஜினி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நிச்சயம் நல்ல முடிவு வரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இதற்கிடையே திரையுலகை சேர்ந்த பலரும் கமலின் வீட்டை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஒவ்‌வொருவரும் தங்களது ஆதரவை கமலுக்கு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏராளமான ரசிகர்களும் கமல் வீட்டு முன்பு திரண்டுள்ளனர். இதனால் கமல் வீட்டு முன்பு ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget