
கணணியின் துணைச் சாதனங்களின் பயன்பாட்டில் இன்று USB சாதனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு USB மூலம் பிரத்தியேகமாக இணைக்கப்படும் சாதனங்களை கணணியின் செயற்பாடு நிறுத்தப்படும் வேளை உரிய முறையில் கையாள வேண்டும். அதாவது முதலில் குறிப்பிட்ட USB சாதனங்களை கணணியின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பின்னரே கணணியினை நிறுத்த வேண்டும் அவ்வாறில்லாவிடின் கணணிக்கும், துணைச் சாதனங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தலாம்.
எனவே இவ்வாறு தவறுதலாகவேனும் USB சாதனங்களின் இணைப்பினை துண்டிக்காது கணணியை நிறுத்தும் போது, எச்சரிக்கை விடுப்பதற்கு USB Guard எனும் மென்பொருள் பயன்படுகின்றது. இது கணணியை USB சாதனங்களை துண்டிக்காது கணணியை நிறுத்தும் போது குறித்த செயற்பாட்டினை தடுக்கின்றது. மேலும் இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது.

தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0.
![]() |
Size:109.2KB |