Hancock ஹாலிவுட் சினிமா விமர்சனம்


Hancock ஒரு வித்தியாசமான படம். அதை அப்படியாகவே விளம்பரப்படுத்தியிருக்கலாம் -  அதைவிட்டுவிட்டு படத்தின் trailers எல்லாம் இதை ஒரு நகைச்சுவைப் படமாக சித்தரித்திருக்கின்றன. விளைவு சற்றே ஏமாற்றம். படத்தின் பல்வேறு trailersகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றால், படத்தில்வரும் நகைச்சுவைக் கட்டங்களையெல்லாம் (பெரும்பாலும்) பார்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
படம் ஒரு superman மாதிரியான சக்திகொண்ட ஒரு மனிதனைப் (Hancock) பற்றியது. தனது சக்திகளைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யவிரும்பினாலும், அது மீண்டும் மீண்டும் பொதுமக்களின் உடைமைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்துவதிலேயே சென்றுமுடிகிறது. அத்துடன் தனது வாழ்க்கையின் பெரும் பகுதி பற்றிய ஞாபகத்தையும் இவர் இழந்து நிற்கிறார். தற்செயலாக ஒரு public relation (PR) manager ஒருவரை இவர் காப்பாற்ற, அதற்கு பிரதியுபகாரமாக Hancockஇன் வெளித்தோற்றத்தை (image) மக்கள் மத்தியில் உயர்த்திக்காட்டவென இந்த PR மனிதர் திட்டம் தீட்டுகிறார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருக்கும் அதே வேளையில் Hancock அந்த PR மனிதரின் மனைவியில் மேல் மையல் கொள்கிறார். இது எவ்வாறாக  அதியமான திருப்பங்களை கொண்டு வருகின்றது என்பது மிகுதிக் கதை!

படத்தில் வரும் மூன்று முக்கியபாத்திரங்களின் நடிப்புத்திறனினால் படம் காப்பாற்றப் படுகிறது. ஆனால் எழுத்தாளரும், இயக்குனரும் படத்தை இடைக்கிடை குழப்பியிருக்கிறார்கள். நகைச்சுவைப் படமா, காதல் படமா, superhero படமா என்று பார்க்கும் எங்களுக்குத் தடுமாற்றம்! நீங்கள் Will Smith அல்லது Charlize Theron ரசிகர் என்றால் இதை கட்டாயம் ரசிப்பீர்கள். என்றாலும் DVDக்காகப் பொறுத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன். படம் என்னவோ மோசமானது இல்லை; குறைவான எதிர்பார்ப்புடன் போனால், இதை நீங்கள் மிகவும் ரசிக்கலாம். படத்தின் கதையில் வரும் ஒரு திருப்பம் மிகவும் நன்றாக இருக்கும். அதை மிகவும் ரகசியாமாக வைத்திருந்தது நல்ல விடயம்!!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget