உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது. ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் உடல் பெருத்து அவதிப்படுகின்றனர். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வதால் உடல் அழகு மட்டுமல்லாமல் ஆரோகியத்தோடும் வாழ முடியும்.
அதற்கு நம் உடலுக்கு ஏற்றார்போல சில வழிகளை கையாண்டால் இனிதே வாழலாம்.
சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்.
விடியற்காலையில் மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், உடலில் உள்ள கொழுப்புகள் எளிதில் கரையும்.
இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடு படுத்தி ஆற வைத்து காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் தொப்பை குறையும்.
உடல் எடையை குறைக்க உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.
பப்பாளிக்காயைய் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும் அழகான தோற்றம் கிடைக்கும்.