புகைப்பழக்கத்தை இன்றுடன் விட்டுவிடலாம், சரி நாளை, நாளை மறு நாள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஈரல், நுரையீரல் பாதிப்படைந்துவிடுகிறது. நாளடைவில் அவை பழுதடைந்து உடல் நலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. சரி புகைப் பழக்கத்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப்பழத்தை உண்பது சிறந்தது.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
மலச்சிக்கல் மற்றும் சூட்டை தனிக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம், அத்தியில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. ஆகையால் இதனை பொதுவாக தினசரி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
சரும பிரச்சனைக்கு அத்திப்பழத்தை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம்.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழம் சாப்பிடுவதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது