பாலாவை பாராட்டும் பாலிவுட் இயக்குனர்


டைரக்டர் பாலாவின் பரதேசி படத்தையும், பாலாவையும் பாலிவுட் இயக்குனரும் பிரபல தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் புகழ்ந்து தள்ளி வருகிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை பெரிதும் பாதித்த இயக்குனர்களில் பாலா முக்கியமானவர். என்னுடைய முதல் படமான பாஞ்ச் படத்தை எடுத்துக் கொண்டிருந்த போதுதான் சேது படத்தை பார்த்தேன். சேது என்னை முழுமையாக பாதித்தது.
அன்றிலிருந்து  நான் பின்பற்றுகின்ற கலைஞனாக இருந்து வருகிறார் பாலா. நான் கடவுள் திரைப்படத்தை பார்த்தபோது என்னை அப்படம் மிகப்பெரிய அளவில் பாதித்தது. அதை வெளிப்படுத்தவே என்னுடைய ‘கேங்ஸ் ஆப் வசேபூரில் அவருக்கான நன்றியை தெரிவித்திருந்தேன்.

இதுவரை யாரும் காட்டிராத அளவிற்கு நான் கடவுளில் என்னுடைய நகரத்தினை அத்தனை அழகோடு காண்பித்திருந்தார். இந்தியாவில் இருக்கிற எந்த இயக்குனரும் பரதேசியில் பாலா உருவாக்கியிருப்பதை போன்ற பழங்காலத்தையும், இடங்களையும் உருவாக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் அறிந்தவரை இந்தியாவின் எந்த ஒரு இயக்குனரும் வடக்கிலோ, தெற்கிலோ இம்மாதிரியான அக்காலக்கட்ட கலாச்சாரத்தையும், மக்களையும் இத்தனை நம்பகத்தன்மையோடு பதிவு செய்ததில்லை. இவருடைய எல்லாப் படங்களும சிறப்பானவை என்பதை அப்படங்களைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். அக்கால வாழ்வியலையும், மக்களின் உணர்வுகளையும் பதிவு செய்த சிறப்பான திரைப்படம் பரதேசி. திரையில் மக்களின் உணர்வுகளை இத்தனை இயல்பாக நான் இதுவரை கண்டதில்லை. இப்படத்தினை ஆங்கிலம் மற்றும ஹிந்தி சப்டைட்டிலுடன் எல்லா இடத்திலும் வெளியிடவுள்ளோம். இதற்காகவே நான் பரதேசி பார்ப்பதற்கு விருப்பப்பட்டேன். அதற்கான வாய்ப்பு அமைந்தபோது உடனே பார்த்துவிட்டேன். பரதேசி படம் பார்த்து தகர்த்தெறியப்பட்டேன், என்று கூறியிருக்கிறார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget