இளமை காலங்களில் சருமம் மற்றும் முக அழகை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள், அதை திருமணம் முடிந்த பிறகு மறந்தே விடுகிறார்கள். ஆண்களின் சருமத்தை விட பெண்களின் சருமம் மிகவும் மிருதுவானது, அதனால்தான் வயது அதிகரிக்கும்போது பெண்களின் முகம் சீக்கிரமாக முதிர்ச்சி அடைந்தது போல் தோன்றும். பெண்கள் 40 வயதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு தோன்ற ஆரம்பிக்கும்.
இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர். ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, முதுமையான தோற்றத்தை அளிக்கும்.
இவ்வாறு, காலம் கடந்தபின் வருத்தபடாமல் நமது வீட்டிலிருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே உங்களின் இளமை தோற்றத்தை திரும்ப பெற இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.
விளக்கெண்ணெய் - விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு மென்மையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு - உருளைக்கிழங்கு ஒரு நேச்சுரல் ப்ளீச். வயதான தோற்றம் வந்தால், சருமத்தில் ஆங்காங்கு பழுப்பு நிறம் காணப்படும். ஆகவே உருளைக்கிழங்கை வைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்து வந்தால், அதனைப் போக்கலாம்.
கரும்பு சாறு - கரும்பு சாறு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மஞ்சள் தூளை கரும்பு சாறு ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வர, முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.
தேன் - தேனை தினமும் முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவி வந்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதிலும் இதனை மறக்காமல், கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதனால் கருவளையம் நீங்கிவிடும்.
எலுமிச்சை - எலுமிச்சை அனைத்து சருமத்தினருக்கும் மிகவும் சிறந்த ஒரு அழகுப் பொருள். எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முதுமைத் தோற்றம் நீங்குவதோடூ, ஆங்காங்கு காணப்படும் புள்ளிகளும் நீங்கும்.