Ring of Death ஹாலிவுட் விமர்சனம்

சிறைச்சாலையின் வார்டன் தன் கட்டுப்பாட்டில் சிறைச்சாலையை வைத்திருந்து அட்டகாசம் செய்வது போலக் காட்டும் திரைப்படங்கள் பலவற்றைப் பாத்திருக்கின்றோம். அவ்வகையில் அமைந்த ஒரு திரைப்படமே இது. இதே போன்று டெத் ரேஸ் எனும் திரைப்படமும் கடந்த வருடம் எடுத்திருந்தார்கள். அந்த திரைப்படத்தில் கால்வாசி கூட இந்த திரைப்படம் இல்லை. எடுத்துக்கொண்ட விடையம் ஏதோ நன்றாக இருந்தாலும் மிக மிக மட்டமான திரைக்கதையைப்
பயன்படுத்தியிருக்கின்றார்கள். பழைய மொந்தையில் புதிய கள்.
சிறைச்சாலை சுவர்களுக்குப் பின்னால் கைதிகளை மோத விட்டு அதனை இணையத்தில் Streaming முறையில் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கின்றார் வோர்டன். இதனை அறிய பொலிஸ் அதிகாரி உள்ளே ஒரு கைதியாக நுழைகின்றார். அவர் இத்தனை அபாயமான செயற்றிட்டத்திற்கு ஒத்துக்கொண்டதற்கு காரணம், மகன் படிப்பு, குடும்ப நிதி நெருக்கடி மற்றும் மீள வெளியே வந்த்தும் காத்திருக்கும் FBI உத்தியோகம்.

வழமை போல எல்லா பொலீஸ் காரனையும் போல இவரும் பல பல உண்மைகளைக் கண்டறிகின்றார். எல்லாம் சுபமாக நிறைவேறுகின்றது.
ஒற்றைக் கண்ணுடன் வந்து பயமுறுத்தும் வோர்டன் Prison Break இரசிகர்களுக்குப் பரீச்சயமானவர். Fox river வோர்டனாக நடித்தவரே (Stacy Keach) இந்த திரைப்படத்திலும் வில்லன் வோர்டனாக நடிக்கின்றார்.

மோசமான பலமில்லாத திரைக்கதையில் திரைப்படம் அல்லல்படுகின்றது. சண்டைக் காட்சிகள் அருமையாகவும் இரத்த மயமாக இருந்தாலும் திரைப்படத்தை ஒரு நல்ல திரைப்படம் எனும் பகுப்பிற்குள் கொண்டுவர முடியாமல் உள்ளது.

எதுவுமே இல்லை வேற எந்த திரைப்படமும் இல்லை. வில்லு பொல்லு போன்ற திரைப்படங்கள் பார்க்கப்போவதாக இருந்தால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget