குரு பெயர்ச்சி ராசி பலன் 2013 - 2014


குரு சுபர்களில் மிக முக்கியமானவர்..குரு பார்க்க கோடி நன்மை...குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்..மெய்யுணர்வுக்கும்,ஆத்ம சிந்தனைக்கும் உரியவர். முழுமையான உடல்,மன ரீதியான வளர்ச்சி அளிப்பவர்..வழிகாட்டி,மூலைக்கு அதிபதி,தன்னறிவு, விவேகத்துக்கும், வித்தைக்கும், விழிப்புணர்ச்சிக்கும் உரியவர்... மனித உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்பவர்
குருபகவான் ஆவார்..ஒன்றில் வெற்றி பெறுவதற்கும் இவர் தயவு தேவை. எதிர் காலத்தைப் பற்றி கவலையை போக்குவார்..

குரு ராசிக்கு 2,,7,9,11 ல் வரும்போது நல்ல வருமானமும், புகழும், செல்வாக்கும்,சுபகாரியங்களும்,எண்ணிய காரியங்கள் தடையின்றி நடப்பதும் உண்டாகும்..மாங்கல்ய பலம் உண்டாகி திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தடையின்றி நடந்துமுடிவதும் குருபலத்தில்தான்..

சபரி சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இந்த வருட குருப்பெயர்ச்சி 30.5.2013 விஜய வருடம் வைகாசி 16 ஆம் நாள் மதியம் 3.55க்கு ரிசபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு மாறுகிறார்...வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 28.5.2013 இரவு 9 மணியளவில்  பெயர்ச்சியாகிறார் அதாவது கோயில் வழிபாடுகள் இந்த தேதியில்தான் நடக்கும்...

மிதுன ராசிக்கு வரும் குரு 5,7,9 ஆம் பார்வையாக துலாம்,தனுசு,கும்பத்தை பார்க்கிறார்...இது அவரவர் ராசிக்கு எந்த இடம் என்பதை பொறுத்து அந்த ஸ்தானங்கள் பலம் பெறும்...

இதனால் எந்தெந்த ராசியினருக்கு நன்மையான பலன்கள் என பார்ப்போம்..


பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !













· மேசம் ராசிக்கு 3ல் குரு வருகிறார்..
· ரிசபம் ராசிக்கு குருபலம் உண்டாகிறது
· மிதுனம் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார்
· கடகம் ராசிக்கு விரயத்தில் குரு வருகிறார்
· சிம்மம் ராசிக்கு லாபத்தில் குரு வருகிறார்
· கன்னி ராசிக்கு பத்தில் குரு வருகிறார்
· துலாம் ராசிக்கு பாக்யத்தில் குரு வருகிறார்
· விருச்சிக ராசிக்கு அஷ்டமத்தில் குரு வருகிறார் 
· தனுசு ராசிக்கு களத்திரத்தில் குரு வருகிறார்
· மகரம் ராசிக்கு ருணரோகத்தில் குரு வருகிறார்
· கும்பம் ராசிக்கு பூர்வபுன்ணியத்தில் குரு வருகிறார்
· மீனம் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு வருகிறார்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget