ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ்!


5. டாக்டர் செஸ் தி லோரக்ஸ்
இந்த அனிமேஷன் படம் ஐந்து வாரங்கள் ஆன நிலையிலும் யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் கலெக்சன் 8.01 மிலடலியன் டாலர்கள். இதுவரை 190 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
4. 21 ஜம்ப் ஸ்ட்‌ரீட்
மூன்று வாரங்கள் முன்பு வெளியான இப்படம் இதுவரை 93 மிலிலியன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 15 மில்லியன் டாலர்கள்.


3. மிர்ரர் மிர்ரர்
சென்ற வாரம் வெளியான இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. மாறாக கலெக்சன் ரொம்பவே வீக். வார இறுதியில் 19 மிலிலியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.


2. ராத் ஆஃப் டைட்டன்ஸ்
யானை சைஸ் படம், வசூல் சுண்டைக் காய் சைஸ். ரொம்ப சுமாரானப் படம் என்று அமெ‌ரிக்க விமர்சகர்க‌ள் க‌ரித்துக் கொட்டியதால் கலெக்சனும் ரொம்ப கம்மி. சென்ற வாரம் வெளியான இப்படம் 34.2 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.


1. தி ஹங்கர் கேம்ஸ்
முதல் வாரத்தைப் போலவே இந்த வாரமும் ஹங்கர் கேம்ஸுக்கே முதலிடம். இதன் வசூல் வேட்டை இன்னமும் தொடர்கிறது. இரண்டாவது வாரத்திலேயே 251 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல் 61.1 மில்லியன் டாலர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்