Jack the Giant Slayer ஹாலிவுட் சினிமா விமர்சனம்


ஹாலிவுட்காரர்களுக்கு ஒரு வசதி. எதை கற்பனை செய்தாலும் அதனை படமாக்குகிற பட்ஜெட் அவர்களுக்கு உண்டு. இந்தப் படமும் அப்படியொரு கதைதான். பூமிக்கும் சொர்க்கத்துக்கும் நடுவில் அரக்கர்களின் உலகம் உள்ளது. அந்த அரக்கர்கள் தோற்றத்தில் படுபயங்கரமானவர்கள். அவர்களின் கட்டை விரலளவே இருக்கிறார்கள் மனிதர்கள். பூமிக்கு வந்து அட்டகாசம் செய்யும் அவர்களை எ‌ரிக் என்ற மன்னர் அடக்கி அவர்களை விரட்டிவிடுகிறார்.
எ‌ரிக்கிடம் இருக்கும் கி‌‌ரீடம் அபூர்வமானது. அது யா‌ரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் அரக்கர்கள். எதிர்த்தால் அரக்கர் உலகமே அழிந்துவிடும். ஆச்சா.. இதுதான் முன்கதை.

இந்த‌க் கதையை கேட்டு இரண்டு குழந்தைகள் வளர்கிறார்கள். ஒரு குழந்தை விவசாயியின் மகன் ஜாக். இன்னொரு குழந்தை இளவரசி இசபெல்லா. வளர்ந்த பிறகு இந்தக் குழந்தைகள் காதலிக்கப் போகிறார்கள், இவர்கள்தான் கதையை நகர்த்தப் போகிறார்கள் என்று நமது மனதில் தோன்றுவது அடுத்தடுத்த காட்சிகளில் அப்படியே நடக்கிறது.

அரக்கர்கள் பூமிக்கு வர ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது சில அபூர்வமான விதைகள். அந்த விதைகளில் தண்ணீர் பட்டால் போதும் கிடுகிடுவென ராட்சஸ மரமாக வானம் கடந்து அரக்கர்களின் ரா‌ஜ்‌ஜியம்வரை வளரும்.

தனது மாமாவுக்கு உதவும் பொருட்டு குதிரையை விற்க வரும் ஹீரோ ஜாக்கிடம் அந்த விதைகளை ஒரு துறவி தந்து மடத்தில் சேர்ப்பிக்கும்படி கூறுகிறார். அந்த விதைக்காக வரும் அரண்மனை வீரர்கள் துறவியை பிடித்துவிடுகிறார்கள். இசபெல்லாவுக்கு எல்லா இளவரசிகளும் சந்திக்கிற திருமணப் பிரச்சனை. மன்னர் தனது மகளை அமைச்சருக்கு மணமுடிக்க நினைக்கிறார். அந்த‌க் கிழ போல்டை திருமணம் செய்ய மாட்டேன் என்று அடிக்கடி அரண்மனையை விட்டு எஸ்கேப்பாகிறாள் இசபெல்லா. ஒருநாள் இரவு அவள் வந்து சேர்வது நமது ஹீரோவின் வீடு. 

அதன் பிறகு திரைக்கதையாசி‌ரியருக்கு பொறுமையில்லை. ஜாக் வைத்திருக்கும் விதைகளில் ஒன்று கீழே விழுகிறது. அந்த விதை இளவரசி இருக்கும் ஜாக்கின் வீட்டோடு உயரே செல்கிறது. இளவரசியை மீட்க, அமைச்சர், தளபதி மற்றும் வீரர்களுடன் ராட்சஸ மரத்தில் ஏறி அரக்கர்கள் உலகம் செல்கிறான் ஜாக்.

எல்ஐசி அளவுக்கு இருக்கும் அரக்கர்களின் சேட்டைகளைப் பார்க்கையில் பயத்தைவிட சி‌ரிப்புதான் வருகிறது. ரொட்டி மாவில் மனிதனையும், பன்றிகளையும் சுருட்டி சாண்ட்விச் தயா‌ரிக்கும் அரக்கன் சி‌ரிப்பின் உச்சக்கட்டம். 

நடுவில் எதிர்பார்த்த டுவிஸ்டாக பழைய மன்னர் எ‌ரிக்கின் கி‌‌ரீடத்தை வைத்து அரக்கர்களை அடக்கி அவர்கள் துணையுடன் பூமியை கைப்பற்ற நினைக்கிறார் மந்தி‌ரி. அதனை எப்படி ஜாக் அண்ட் கோ முறியடிக்கிறார்கள் என்பதை அதிக ஆச்ச‌ரியங்கள் தராமல் சொல்லியிருக்கிறார்கள்.

195 மில்லியன் டாலர்கள் செலவில் (ஏறக்குறைய 975 கோடிகள்) எடுக்கப்பட்டிருக்கிற படம். பட்ஜெட்டுடன் ஒப்பிட்டால் சி‌ஜி வொர்க் எல்லாம் பரவாயில்லை ரகம்தான். இந்த காசுக்கு கலக்கியிருக்க வேண்டாம்? அந்த ராட்சஸ மரம் முறிந்துவிழும் காட்சியும், இரட்டைத்தலை அரக்கன் தலைவனின் வயிற்றுக்குள்ளிலிருந்து ராட்சஸ மரம் வெளிவரும் காட்சியும் ரசிக்கலாம். இளவரசி கொள்ளை அழகு. இரண்டு லிப் லாக்கோடு அவ‌ரின் வேலை முடிந்தது. 

பணத்தை செலவு பண்ணினால் போதுமா அதுக்கேற்ற சரக்கு வேண்டாம் என்று அமெ‌ரிக்காவிலேயே படத்தை துரத்திவிட்டார்கள். இரண்டு வாரங்களில் திக்கித்திணறி 46 மில்லியன் டாலர்களைதான் வசூலித்திருக்கிறது. அமெ‌ரிக்கா தவிர்த்த நாடுகள் கை கொடுத்தால்தான் உண்டு. அதற்கும் ஆப்பு வைப்பது போல் அடுத்தடுத்து பிரமாண்ட படங்கள் வெளியாகின்றன. 

படத்தை இயக்கியிருப்பவர் பிரையன் சிங்கர். எக்ஸ்மென் சீ‌ரிஸை இயக்கிய ஆள்தான். ஆனால் இந்தப் படத்தில் எப்படியோ சறுக்கிவிட்டார்.

குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு படம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget