புதிய சம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது


பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போன் அமெரிக்காவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் சந்தைக்கு வருகிறது இந்த அதிசய சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ஃபோன். S3 ஸ்மார்ட் போன் தான் அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். ஆனால் அதைவிட இதில் ஸ்க்ரீன் பெரிதாகவும் ஷார்ப்பாகவும் இருக்கும். 5 இன்ச் திரை. ஆனாலும் அமைப்பில் S 3 வகையறாவைவிட சற்றே சிறிதாக இருக்கும்.


உலகம் முழுதும் ஏப்ரல் முதல் ஜூனிற்குள் இந்த ஸ்மார்Tபோன் விற்பனைக்கு வரவுள்ளது.

இதன் விலையை நிறுவனம் கூறாவிட்டாலும் அமெரிக்காவில் இது தற்போதைக்கு 200 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் குறை தொழில் நுட்ப செல்போன்களை அறிமுகம் செய்து அதுவரை ஆதிக்கம் செலுத்திய நோக்கியாவையும் தடுமாற வைததது சாம்சங்.

ஆய்வுகள் தெரிவிப்பதென்னவெனில் ஆப்பிள் ஐபோன் 4S- ஐ விட சாம்சங் கேலக்சி S3 விற்பனையில் விஞ்சி நிற்கிறது என்பதே.

சாம்சங் S4 புதிய தரநிலையை நிர்ணயம் செய்யும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. விற்பனைக்கு வந்து பயன்படுத்தும்போதுதான் நாமும் இது பற்றி கருத்துக் கூற முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget