கோச்சடையான் பட்ஜெட் உங்களுக்கு தெரியுமா


கோச்சடையான் பட்ஜெட் மற்றும் அதன் தொழில்நுட்பக் குழு பற்றிய தகவல்களை படத்தின் தயா‌ரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் அறிவித்தார். ர‌‌ஜினி நடித்திருக்கும் கோச்சடையான் 3டி அனிமேஷன் படம் ர‌‌ஜினியின் மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இந்தப் படம் தொடங்கப்பட்ட போது 2012 தீபாவளிக்கு வெளியாகும் என்றனர். லண்டன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய ர‌‌ஜினி, தீபாவளிக்கு
முன்பே படம் வர வாய்ப்புள்ளதாக‌‌த் தெ‌ரிவித்தார்.

ஆனால் படத்தின் அனிமேஷன் பணிகள் நினைத்ததைவிட அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இந்தியாவில் தயாராகும் முதல் 3டி மோஷன் கேப்ச‌ரிங் திரைப்படம் கோச்சடையான் என்பது முக்கியமானது.

சமீபத்தில் படத்தின் எடிட்டிங் வெர்ஷனைப் பார்த்த ர‌‌ஜினி, படம் பிரமாதமாக வந்திருப்பதாக தனது மகிழ்ச்சியை தெ‌ரியப்படுத்தினார். ர‌‌ஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

ஹாலிவுட்டில் மிகப்பெ‌ரிய ஓபனிங்கை பெற்ற தி அவென்சர்ஸ் படத்தில் பணிபு‌ரிந்த தொழில்நுட்பக்குழு கோச்சடையானில் பணியாற்றி வருவதாகவும், ஜூலை மாதத்தில் படத்தை வெளியிட உத்தேசித்துள்ளதாகவும் டாக்டர் முரளி மனோகர் தெ‌ரிவித்துள்ளார்.

கோச்சடையானின் பட்ஜெட் 150 கோடியை தாண்டும் என பலரும் தெ‌ரிவித்திருந்த நிலையில், இது 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படம் என உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். 

படம் வெளியாகும் போது பட்ஜெட் இன்னும் பல கோடிகள் எகிறும் என தெ‌ரிகிறது. படத்தின் நீளம் இரண்டு மணி ஐந்து நிமிடங்கள் எனவும் கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்