
இப்பொழுதெல்லாம் இண்டர்நெட் என்பது ஒரு மந்திரச்சாவி. அதில் கிடைக்காததே கிடையாது. கோப்புகளாக, படங்களாக, வீடியோக்களாக, மியூசிக்காகவும் தரவுகள் மாறியுள்ளன. உதாரணத்திற்கு, பழைய நூலகம் இன்று புதிதாய் டிஜிடல் வடிவமெடுத்துள்ளது என்றே சொல்லலாம். பழைய படங்களை நாம் நினைத்தவுடன் பார்த்துவிட முடியாது. டிவிடியாக கிடைப்பதும், தேடுவதும் சிரமமே! இதை தவிர்க்கவே பலரும் இண்டர்நெட்டில்
படங்களை பார்க்கின்றனர். சில தளங்கள் தரவிறக்கம் செய்யும் வசதியையும் தருவது குறிப்பிடத்தக்கது.
பின்வரும் இணைய தளங்களை பழைய படங்கள் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தவும்.