முருகப் பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சவமாகவும், கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.
விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.
1.நாற்பத்தி எட்டு ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருப்பவர்களுக்கு, அடுத்த பிறவி தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக அமையும் என்பது பெரியோர்களின் கருத்தாகும்.
2.பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.
3.பங்குனி உத்திரத்தன்று வேண்டுதல்களின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோரைப் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
4.திருமகள் இந்த விரதத்தைக் கடைபிடித்து விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.
5.இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இந்திரன் - இந்திராணியையும், பிரம்மன் சரஸ்வதியையும் பெற்றார்கள்.
6. பங்குனி உத்திரத்தன்று சாமி கடல், ஏரி, தடாகம் போன்ற இடங்களில் தீர்த்தம் கொடுப்பார். அப்போது அதில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.