
லட்டு திண்ணதன் மூலம் இப்போது கரண்சிகளை அள்ளிக் கொண்டிருக்கும் கரெண்ட் ஸ்டாருக்கு பல மனைவிகள் என்பது உலகம் அறிந்த ரகசியம். தினமும் ஒரு மனைவியுடன் படப்பிடிப்புக்கு வருகிறார் கரண்ட் ஸ்டார். அவருக்கு பிடித்த உணவுகளை தயாரித்து ஊட்டி வருகிறார்கள் மனைவிகள். மனைவிகளின் அன்பு மழை, தயாரிப்பாளர்களின் பண மழையில்
நனைந்து கொண்டிருந்தவருக்கு இப்போது வந்திருக்கிறது சிக்கல். கொட்டும் பணமழையில் யாருக்கு எவ்வளவு பங்கு? யார் பணத்தை கையாள்வது? என்பதில் மனைவிகளுக்குள் குடுமி பிடி சண்டை ஆரம்பிச்சிடுச்சாம். நடிப்பில் கவனம் செலுத்தறதா, இவர்களின் சண்டையை தீர்த்து வைப்பதா என்று இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாராம் கரெண்ட் ஸ்டார். இதனால் சமீபகாலமாக அவரது கேரவனுக்குன் மனைவிகளைக் காணவில்லை. மிக விரைவில் மனைவிகளில் ஒருவர் மீடியாக்களை சந்திப்பார் என்கிறார்கள்.