தமிழக பட்ஜெட் 2013 சிறப்பு பார்வை


தமிழக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்
2013- 2014 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் 

* தமிழக காவல்துறை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.4,706 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தீயணைப்பு துறைக்கு ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* நீதி துறைக்கு ரூ.695.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மின்சாரம் மற்றும் கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் * கூட்டுறவு சங்கங்களில் கூடுதலாக 9914 பணியிடங்கள் உருவாக்கப்படும்
* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படும்
* நகர்புற வேலைவாய்ப்பு வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.99.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
*சிறைத்துறைக்கு ரூ.179 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* கல்வி சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
* நடப்பு நிதியாண்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2.11 லட்சம் கோடியாகும். 
* கால்நடை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* குடிநீர் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.37.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தரமான விதைகளை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு ரூ.161.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
உழவர் பெருவிழா நடத்துவதற்கு ரூ.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* கூட்டுறவு சங்க சுழல் நிதிக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.39,235 கோடி வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* பயிர்கடன் திட்டத்திற்கு ரூ.3720 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழக பட்ஜெட்டில் மீன்பிடி துறைக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*  உணவு மானிய திட்டத்திற்கு ரூ.4900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* ரூ.32.6 கோடி முதலீட்டில் 7 நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்பட உள்ளது.                                * கோழி வளர்ப்பிற்கு ரூ.105 கோடி
* பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.16,965 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
*நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.156.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* சுற்றுச் சூழலை பாதுகாக்க ரூ.880.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுளளது
* சிறு மற்றம் நடுத்தர கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.770 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* புதிய தொழில் முனைவோர் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மதுரையில் காளவாசல் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக 2 மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் 4 பாலங்களும் அமைக்கப்படவுள்ளன.
* தமிழ்நாட்டின் சாலை திட்டங்களுக்கு ரூ.6,452.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இலவச வேஷ்டி சேலை திட்டத்திற்கு ரூ.362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* மாநில போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழ் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* சுற்றுத்தலங்களின் மேம்பாட்டிற்கு ரூ.67.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* மின் உற்பத்தி பகிர்மான திட்டத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*பெண்கள் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.720 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
*ஆரம்ப சுகாதார மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  * பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. 
* 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* 24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகைக்கு ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.366.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* 13 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள் வழங்க ரூ.19.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
*மாணவர்களின் இலவச பேருந்து பயணச்சீட்டுகள் வழங்க ரூ.322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
* ஒகேனக்கல் குடிநீர் திட்டம் விரைந்து செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget