The Invasion ஹாலிவுட் சினிமா விமர்சனம்

வேற்றுக் கிரக வாசிகள் பல வேசங்களில் வந்து பூமிக்குசவால்விடும் திரைப்படங்கள் பலவற்றைப்பார்த்திருக்கின்றோம். இவ்வாறாக இது வரை வெளிவந்தஹொலிவூட்திரைப்படங்களைப் பட்டியல் போடப் போனால்அது மோசமாகநீளும். அந்த வரிசையில் ஒரு திரைப்படம். ஒருவேற்றுக் கிரகவாசியையோ அல்லுது ஒரு பறக்கும்தட்டையோ காட்டாமல் ஒரு திரைப்படம்எடுத்திருக்கின்றார்கள்.
இந்தக் கதையில் வேற்றுக் கிரகவாசிகளுக்குப் பதிலாகபூமிக்கு வெளியே இருந்து வரும்வைரசுக்கள் மனிதனைஆட்டிப்படைப்பதையும் அதன் மூலம் மனிதர் அடையும்பிரைச்சனைகளையும்இந்த திரைப்படம் காட்டுகின்றது. 
விண்ணில் இருந்து ஒரு நாசா அனுப்பிய ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு வட்டத்தினுள் நுழைகின்றது. ஆனால் கெட்டகாலம் அந்த விண்கலம் அமெரிக்க வான் பரப்பில் உடைந்து சிதறிவிடுகின்றது. அவசரமாக அமெரிக்க அரசு அந்தப் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என்று கட்டளையிடுகின்றது. அவசரக்குடுக்கைகளான அமெரிக்கர்கள் அந்தப் பாகங்ளைத் தொட்டுத் தொலைக்கின்றனர். அந்த சிதறிய பாகங்களில் இருந்து வைரசுக்கள் பரவத் தொடங்குகின்றது.
சாதாரணமாக அமெரிக்க திரைப்படங்களில் வரும் வைரசுக்கள் பயங்கரமாக இருக்கும். மனிதரை இரத்த வெறிகொண்டவராக மாற்றக்கூடியவையாக இருக்கும். ரெசிடன் ஈவில் போன்ற திரைப்படங்கள் உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் இந்த திரைப்படத்தில் வரும் வைரசுக்கள் மனிதருக்கு அப்படியொன்றும் மோசமான செயலை செய்யவில்லை. மனிதர்கள் யாவரையும் ஒரு அணியில் சேர்க்க உதவத் தொடங்குகின்றது. மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் வெறுப்பதற்குப் பதிலாக ஒருத்தரை ஒருத்தர் விரும்பத் தொடங்குகின்றனர்.
வைரசு தொற்றுக்குள்ளானவர் உடனடியாக அந்த வைரசுக்கு அடிமையாக மாட்டார். வைரசு தாக்குதலுக்குப் பின்னர் கொள்ளும் முதலாவது நித்திரையின் பின்னரே வைரசு தாக்கத்திற்கு உள்ளாவர். அத்துடன் வைரசு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் தம்மிடம் இருக்கும் வைரசை மற்றவர்களுக்குப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபடுவர்.
இத்தனை பிரைச்சனை மத்தியிலும் இந்த வைரசில் இருந்து தன் மகனைக் காப்பாற்றவும், வைரசின் பிடியில் செயற்படாமலும் இருக்க ஒரு பெண் (Nicole Kidman) எடுக்கும் முயற்சியைச் சுற்றி கதை நகர்கின்றது.
தன் முன்னாள் கணவரிடம் இருந்து வைரசை பெற்றுக் கொள்ளும் இந்த தாயார் தான் நித்திரைகொண்டால் வைரசின் தாக்கத்திற்கு அடிமையாகிவிடுவோம் என்று நித்திரைகொள்ளாமல் ஓடித்திரிவார்.
இப்படி போகும் கதையில் கிட்டத்தட்ட மனிதர்கள் தம் சுயத்தை இழக்கின்றார்கள். அதாவது ஒருத்தரை ஒருத்தர் அடித்துப் போடும் பழக்கம். இந்த வைரசின் பிடியில் இருந்து எவ்வாறு மீள்கின்றார்கள் மற்றும் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் என்ன ஆனது என்பது மிகுதிக்கதை.
கசினோ ரோயல் ஜேம்ஸ்பாண்ட் இந்த திரைப்படத்திலும் நாயகனாக நடிக்கின்றார். விறுவிறுப்பிற்கு குறைவில்லை
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget