
சில பேரின் முகம் கூட மனதில் பதியாமல் மறைந்து போய் விடும். சிலரை வாழ்நாளின் கடைசி நொடி வரை மறக்க முடியாது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நமீதா.... தமிழ் சினிமாவை கலக்கிய வெகு சில நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. கவர்ச்சி மட்டுமே இவரது பலம் என்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி அவரது முகம், அதன் வசீகரம்.. அதுவும் கூடத்தான் நமீதாவை மக்கள் மனதில் படு வேகமாக டேரா போட வைத்தது.
நமீதாவை தமிழ் ரசிகர்கள் தற்போது நிறையவே மிஸ் செய்கிறார்கள்.. அந்த கவர்ச்சி காட்டாறு குறித்த ஒரு சின்ன பிளாஷ்பேக் !
நடிகையாவதற்கு முன்பே சூரத்தின் அழகியாக, மிஸ் சூரத்தாக தேர்வானவர் நமீதா. இது நடந்தது 1998ல். மிஸ் இந்தியாப் போட்டியிலும் 2001ம் ஆண்டில் கலந்து கொண்டார் நமீதா. ஆனாலும் பட்டம் என்னவோ இவரிடம் வரவில்லை.
அருண் ஐஸ்கிரீம் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் நமீதா.. தெரியுமா.. பெரிய ஹிட் விளம்பரமாம் அது அப்போது. அதேபோல மாணிக்சந்த் குத்கா, ஹிமானி கிரீம் ஆகியவற்றிலும் இவர் நடித்தார்.
தெலுங்குப் படத்தின் மூலம் தான் நடிகையானார் நமீதா. அவர் நடித்த முதல் தெலுங்குப் படம் சொந்தம்.2004ம் ஆண்டு ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து தமிழுக்கு வந்தார் நமீதா. ஒன்று ஏய்.. இன்னொன்று எங்கள் அண்ணா.
2006ம் ஆண்டு இந்தியிலும் நடித்து அறிமுகமானார் நமீதா. ஆனால் சேவையை தொடரவில்லை. 2010ம் ஆண்டு இவரை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒரு தீவிர ரசிகர் கடத்த முயன்றதாக செய்தி வெளியாகி டென்ஷனை ஏற்படுத்தியது. ஆனால் பத்திரமாக தப்பினார் நமீதா.
தமிழ் சினிமாவில் உயரமான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த பெருமைக்குரியவர் நமீதா - விஜயகாந்த், சுந்தர். சி போன்ற சிலரைத் தவிர. சத்யராஜ், சரத்குமார் என இந்த வரிசை நீளும். அதேபோல சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து, அப்பா, மகனுடன் ஜோடி போட்ட நடிகைகள் வரிசையில் இணைந்தவர்.
அஜீத்தின் பில்லாவில் புதுவிதமான கவர்ச்சியுடன் கலக்கியவர் நமீதா. அதேபோல விஜய்யுடன் அழகிய தமிழ் மகனில் சின்னதாக ஒரு டூயட் பாடி விட்டுப் போனார்.
இப்போது நமீதாவை சுத்தமாக தமிழில் பார்க்க முடியவில்லை. கவர்ச்சி களேபர நாயகிகளில் ஒருவராக இருந்தாலும் கூட அத்தனை பேரின் மனதையும் வசீகரித்தவர் நமீதா.
மீண்டும் பூங்காற்று திரும்புமா....ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள் நமீதாவின் மச்சான்ஸ்.!