சூடு வைத்த ஆட்டோ மீட்டர் போலதான் சுந்தர் சி.யின் படப்பிடிப்பும். தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்திருக்கும். மத கஜ ராஜா இன்னும் வெளியாகவேயில்லை. அதற்குள் அடுத்தப் படம் தீயா வேலை செய்யணும் குமாரு முடிவை நெருங்கியிருக்கிறது. சில இயக்குனர்கள் ஒரே ஸ்கிரிப்டை நாலு வருடங்கள் தேய்க்கும் போது இவரால் மட்டும் எப்படி ஜெராக்ஸ் மிஷினாக அடித்து தள்ள முடிகிறது?
கலகலப்பு பிரெஞ்ச் படமான ஸோல் கிச்சனின் காப்பி. ஸோல் கிச்சனைப் போல் ஓராயிரம் படங்கள் இருக்கையில் சுந்தர் சி. எதற்கு கஷ்டப்பட வேண்டும் என நெம்புகோல் போடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
சாரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் கதை என்ன?
நம்ம நாயகனின் பரம்பரையில் எல்லோருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாயகன் சித்தார்த்துக்கு மட்டும் காதலி அமையவில்லை. நண்பனின் உதவியுடன் காதலிக்க தோதான பெண்ணை தேடிக் கொள்கிறான். அந்தப் பெண் இவனை காதலித்தாளா என்பதுதான் கதையாம். இதில் ஐடி கம்பெனியில் வேலை செய்பவராக வருகிறார் சித்தார்த்.
டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிவடைந்ததால் ஐப்பானில் இரண்டு பாடல் காட்சியை ஷுட் செய்துவிட்டு மே யில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.