பாலா இயக்கியுள்ள புதிய படம் பரதேசி. வருகிற 15-ந்தேதி இப்படம் வெளியாகிறது. முன்னதாக நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் ஒன்று வெளியானது. அதில் காட்சிகளை பாலா நடிப்பவர்களுக்கு விளக்கியதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது, அவர் ஒருவரை எட்டி மிதிப்பது போன்றும், இன்னொரு காட்சியில் அதர்வா, தன்சிகா உள்ளிட்டோரை காலால் எட்டி மிதித்து தள்ளுவது.
கம்பால் கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதைப்பார்த்து கோவையைச்சேர்ந்த சமூக மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர் பாலா மீது சாடியுள்ளனர்.
அதில், வியாபார ரீதியாக படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மனிதர்களை மிருகங்களைக்காட்டிலும் கேவலமாக அவர் நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார்கள். அந்த காட்சிகள் மனதை பாதிக்கும்படியாக உள்ளன. இந்த மாதிரியான காட்சிகள் இடம்பெற்ற ஒரு படத்துக்கு எப்படி தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் கொடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்த ட்ரெய்லருக்காகவே படத்தை தடை செய்யலாம் என்று கோரியுள்ளார்களாம்.
ஆனால் இதுபற்றி பாலா தரப்பில் கூறும்போது, ட்ரெய்லரில் அடிப்பது போன்ற காட்சியில் பயன்படுத்தப்பட்டது வெறும் டம்மியிலான கம்புதான். சிலர் அடிவாங்க வேண்டும். அவர்களை ஒருவர் அடிக்க வேண்டும் என்பது போன்ற காட்சி என்பதால் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக அப்படி நடித்துக்காட்டினேன். மேலும், நான் அடித்தது நிஜமான அடி அல்ல. அடிப்பது போன்று நடித்து மட்டுமே காட்டியதாகவும் கூறியுள்ளார் பாலா.