திரை உலக பிரபலங்களும் அவர்களது ஆரம்ப வாழ்க்கையும்


திரை வானில் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலித்தாலும் சில நடிகர், நடிகையர்கள் மனதுக்கு பிடித்த தொழிலை செய்து கொண்டிப்பார்கள். ஹோட்டல் வைத்திருப்பார்கள் அல்லது பிசினெஸ் செய்வார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கை பஸ் கண்டக்டராக தொடங்கியது. இப்போது சென்னையில் கல்யாண மண்டபத்தில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். அதேபோல பல திரை உலக பிரபலங்கள் என்ன தொழில் செய்கின்றனர்
தெரிந்து கொள்ளுங்களேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவிற்கு வரும் முன்பாக பஸ் கண்டக்டராக ஸ்டைலாக பணிபுரிந்தவர். அந்த ஸ்டைல் இன்றைக்கும் தொடர்கிறது.

ரோஜாவில் அறிமுகமான அரவிந்த் சுவாமி நடிப்புடன் தன்னுடைய பிஸினெசையும் கவனித்து வருகிறார். ட்ரெயினிங் மற்றும் டெவலப் மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தல அஜீத்திற்கு பைக் என்றால் கொள்ளைப் பிரியம். ரேஸ் என்றால் விடவே மாட்டார். தவிர அவர் சிறந்த மெக்கானிக்.

அஞ்சாதே, கோ படங்களில் நடித்த அஜ்மல் ஒரு டாக்டர் என்பது பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் நடிப்புடன் டாக்டர் தொழில் செய்கின்றனர்.

அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆகும் முன் மாடலிங் செய்த மாதவன் பெர்சனாலிட்டி டெவலப் மென்ட் நடத்துகிறார். பிரபல நடிகர் ஆன பின்னரும் அந்த தொழிலை விட வில்லை.

நடிகர் வினய், விஸ்வரூபம் வில்லன் ராகுல் போஸ் ஆகியோர் ரக்பி வீரர்களாம்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த விஷ்ணு கிரிக்கெட் விளையாட்டு வீரராம். இன்றைக்கும் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பேட்டும் கையுமாக அவரைப் பார்க்கலாம்.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையான அனுஷ்கா ஷெட்டியின் ஆரம்ப கால வாழ்க்கை யோகாவில் தொடங்கியது. இன்றைக்கும் அவர் பிரபல நடிகையாக உயர்ந்த பின்னரும் மெடிடேசன், யோகாவை கைவிடாமல் இருக்கிறார்.

ஆதி பகவான் கதாநாயகி நீது சந்திரா மகாராஷ்டிரா மாநிலத்தில் பேஸ்கட் பால் வீராங்கனையாம். திரைத்துறைக்கு வரும் முன்பு பறந்து பறந்து கோல் போட்டவர்... உயரத்தைப் பார்த்தாலே தெரிகிறதா?

வெள்ளாவி நடிகை டாப்ஸி ஒரு சாப்ட்வேர் இஞ்சினியராம். நடிக்க வரும் முன்பு பிரபல ஐ.டி. கம்பெனியில் புரோகிராமராக வேலை பார்த்த அனுபவம் உள்ளதாம்.

பழைய பதிவுகளை தேட