
வட அமெரிக்கா தவிர்த்து 62 நாடுகளில் இப்படம் இதுவரை வசூலித்திருப்பது 211 மில்லியன் டாலர்கள். இதில் ஜப்பான் நாட்டின் வசூல் சேர்த்தியில்லை. வட அமெரிக்காவில் இதன் வசூல் 111 மில்லியன் டாலர்கள். ஆக, சென்ற ஞாயிறு வரை இதன் உலகளவிலான வசூல் 322 மில்லியன் டாலர்கள். இது இப்படத்தின் முந்தைய பாகத்தைவிட அதிகம்.
டாம் க்ரூஸின் Oblivion இரண்டு வாரங்களில் 61 நாடுகளில் 112 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. அமெரிக்க வசூல் 38.2 மில்லியன் டாலர்கள்.
இவையிரண்டையும் தூக்கி சாப்பிடும் இன்னொரு படம் த க்ரூட்ஸ். இதுவரை இதன் (யுஎஸ் தவிர்த்த) வசூல் 274.5 மில்லியன் டாலர்கள். யுஎஸ் வசூலையும் சேர்த்து 429 மில்லியன் டாலர்கள். சைனாவில் சென்ற வாரம் 6 மில்லியன் டாலர்களை வசூலித்து நிஜ ஹீரோக்களுக்கு இப்படம் சவால்விடுகிறது.