அழகன் அழகி சினிமா விமர்சனம்


நடிகர் : ஜாக்
நடிகை : ஆருஷி
இயக்குனர் : நந்தா பெரியசாமி
இசை : கண்ணன்
ஓளிப்பதிவு : பிரபு தயாளன்

ஜாக், ஆர்த்தி சாம்ஸ் மூவரும் டி.வி.யில் வேலை பார்ப்பதாக சொல்லி கேமராவுடன் கிராமங்களுக்கு செல்கின்றனர். தாங்கள் டி.வி. நடத்தும் அழகன் அழகி
நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதாக திறமையானவர்களை தேர்வு செய்து கட்டணம் வசூலிக்கின்றனர். அப்போது ஒரு கிராமத்தில் வீட்டு வேலை பார்க்கும் ஆருஷியை சந்திக்க நேர்கிறது. அவர் மேல் ஜாக்,  காதல் வயப்படுகிறார். 

ஆருஷியை கைதிக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்கின்றனர். அவரை ஜாக் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஓடுகிறார். காட்டில் நக்சலைட்டுகளிடம் சிக்குகின்றனர். ரவுடிகளும் தேடி அலைகிறார்கள். போலீசாரும் அவர்களை பிடிக்க வலை விரிக்கின்றனர். அப்போது ஜாக் குழுவினர் யார் என்ற மர்ம முடிச்சு அவிழ்கிறது. அவர்கள் தப்பினார்களா காதல் நிறைவேறியதா? என்பது மீதி கதை... ஜாக், கேரக்டரில் பொருந்துகிறார். 

கிராமத்தினரை கேமரா முன் நிறுத்தி நடிக்க வைத்து படமாக்கும் அவஸ்தைகள் கலகலப்பு. ஆருஷி அழகில் மயங்கி அடிக்கடி தன் முகாமுக்கு வரவைப்பது, தூக்கில் தொங்கும் அவரை காப்பாற்றி ஊரை விட்டு ஓடுவது... ஆருஷிவிடம் காதலை சொல்ல நினைத்து முடியாமல் திணறுவது என ஸ்கோர் பண்ணுகிறார். நடிக்கும் ஆசை ஒரு புறம் வீட்டுக்காரர்கள் பயம் ஒரு புறம் என வரும் ஆருஷி கேரக்டரில் வாழ்கிறார். 

கைதிக்கு தன்னை மண முடிக்க நடக்கும் சதி அறிந்து கதறுவது உருக்கம். போலீஸ் பிடித்து போகும் `ஜாக்' பின்னால் ஓடி சார் நல்லவர் விட்டுருங்க என கதறி நெஞ்சில் இறங்குகிறார். ஆர்த்தி, சாம்ஸ் சிரிக்க வைக்கின்றனர். ஒரு கால் நொண்டியபடி வரும் ரவிமரியா வில்லத்தனத்தில் குரூரம்... 

போலீஸ் அதிகாரியாக வரும் ஏ.வெங்கடேஷ் கேமரா முன் வீராவேச வசனம் பேசி நடித்து காட்டுவது ரகளை... பிறகு சீரியஸ் முகத்துக்கு மாறி குற்றவாளிகளை தேடி அலைந்து என்ன நடக்குமோ என எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார். கஸ்தூரி ஒரு பாட்டுக்கு கிளுகிளுப்பாக ஆடுகிறார். பவர் ஸ்டார் சீனிவாசனும் காதல் தத்துவ பாடல் ஒன்றை பாடுகிறார். வித்தியாசமான கதை களத்தில் காட்சிகளை காதல், காமெடி என கலகலப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி. 

முதல் பகுதியில் நடிப்பாளர்கள் தேர்வை நீட்டி இழுப்பது நெளிய வைக்கிறது. பிற்பகுதி போலீஸ், வில்லன்கள் துரத்தல் என வேகத்துக்கு மாறுகிறது. கிளைமாக்ஸ் ஜீவன். கண்ணன் இசையில் பாடல்கள் இனிமை. பிரபு தயாளன் ஒளிப்பதிவில் கிராமிய அழகு.  
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget