மொபைல் போன்கள் புதிரான தகவல்கள்


ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை என்பது உலக அளவில் மிகவும் வளர்ச்சியில் உள்ளது. பெரும்பாலானோர் தற்பொழுது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். இதன் காரணமாகவே மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை
வடிவமைக்கின்றன.
ஸ்மார்ட்போன் வளர்ச்சி இன்னும் சில வருடங்களில் தற்போதைய சூழலைவிட 50 சதவிகிதம் அதிகரித்திருக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், செயல்திறன் அதிகமும் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்களை ஜப்பானியர்கள் 55 சதவிகிதத்தினர் பயன்படுத்துகின்றனர்.

ஐஒஎஸ் இயங்குதளத்தை சுவிட்சர்லாந்த்தில் உள்ளவர்கள் 52 சதவிகிதத்தினர் பயன்படுத்துகின்றனர்.

எகிப்து நாட்டில் ஐபோன்களை விடவும் விண்டோஸ் செல்போன்களே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

அரேபிய நாடுகளில் ப்ளாக்பெர்ரி வகை செல்போன்களே அதிக அளவில் பயன்படுத்துகின்றனராம்.

சீனாவில் 52 சதவிகிதத்தினர் ஸ்மார்ட்போன் வகை செல்போன்களையே பயன்படுத்துகின்றனர்.

செல்போன்கள் வழியாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மெக்ஸிகோவினர் முதலிடம் பெறுகின்றனர். மொத்தம் 74% என்கிறது ஆய்வு.

வீடியோக்கள் பார்ப்பவர்களை அதிகமாகக் கொண்ட நாடு என்ற பெருமையை சவுதி பெறுகிறது.

வட அமெரிக்கர்கள் ஸ்மார்ட்போன்களை உணவு விடுதிகளை தேடுவதற்கும், 'பார்களின்' விவரங்களைப் பெறுவதற்கு மட்டுமே அதிக அளவில் பயன்படுத்துகின்றனராம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget