இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்


ஏப்.14ல் விஜய தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆனாலும், ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் அமிர்தயோக வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்திலேயே பிறந்து விடுகிறது. புத்தாண்டு பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், ஆண்டு முழுதும் நல்லமழை பொழியும் என்றும், விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர் என்றும் பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் ஆண்டு அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். சுபகிரகமான குரு, இந்த ஆண்டின் ராஜாவாக இருக்கிறார். குருவும், சந்திரனும் பலமாக இருப்பதால் இவ்வாண்டில் ராஜயோகம் பெறுபவர்கள் எண்ணிக்கை உயரும்.

புத்தாண்டில் என்ன நடக்கும்?

*பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
*குருவும் சந்திரனும் சம்மந்தப்படுவதால் தட்பவெப்பநிலை சீராக இருக்கும்.
*ஆடி முதல் மார்கழி வரையில் நல்ல மழையும், தைமுதல் ஆனிவரையில் சுமாரான மழையும் பெய்யும்.
*மக்களிடம் தெய்வபக்தி மேலோங்கும்.
*பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறும்.
*ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சிறப்பாக நடக்கும். ரியல் எஸ்டேட் வியாபாரம் வளர்ச்சி பெறும். நிலமதிப்பு அதிகரிக்கும்.
*தங்கம், வெள்ளி விலை ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் இருக்கும்.
*மளிகை, தானியம், அரிசி, இயந்திரம், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை உயரும். வாசனை திரவியங்களின் விலை குறையும்.
*மணல் பற்றாக்குறை நீங்கும்.
*வங்கி கடனுதவியால் மக்கள் நல்வாழ்வு காண்பர்.
*தொழிலாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மின்சார தடை அதிகரிக்கும்.
*அதிகாரிகள் கருப்பு பணத்தை அதிகளவில் கண்டுபிடிப்பர்.
*மத்திய,மாநிலஅரசுகளுக்கிடை@ய கருத்துவேறுபாடு அதிகரிக்கும்.
*ஏழை மக்களுக்கு அரசு சலுகைகளை வாரி வழங்கும்.
*வனவளம் அதிகரிப்பதால் விலங்குகள் நிம்மதியாக வாழும்.
*அயல்நாட்டு மோகம் குறையும். மீனவர்களின் பிரச்னை தீர அரசு நடவடிக்கை எடுக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget