நாம் உண்ணும் உணவு செரிமானமாவது எப்படி?


நாம் சாப்பிட்ட பின்னர் நடைபெறும் உணவு ஜீரணித்தால் என்பது மிகச் சிக்கலான இயற்கை ரசாயன பரிசோதனை போன்றது. இரைப்பைக்குள் நடக்கும் அத்தனை விஷயங்களையும் செயற்கையாக ஒரு சோதனைக் குழாயில் நடத்திப் பார்த்துவிட விஞ்ஞானிகள் நினைத்தார்கள். மனித உடலில் உள்ள எல்லாவிதமான ஜீரண அமிலங்களையும் வைத்துக் கொண்டு செயற்கையாக வெற்றிகரமாக சோதனைச் சாலையில் நிகழ்த்த விஞ்ஞானிகளால் முடியவில்லை.
அந்த அளவுக்கு சிக்கலான பல நிகழ்வுகளை கொண்டது செரித்தல் என்னும் செயல். 

இரைப்பையில் உள்ள அமைலேஸ்,பெக்டேஸ் போன்ற பல நொதிகள் இந்த செரித்தல் செயலை நிகழ்த்துகின்றன. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் போன்ற பல சத்துக்கள் எளிய பொருட்களாக கரைக்கப்பட வேண்டும். உணவுக் கொழுப்பை எளிதாக கரைக்க செரிமான மண்டலத்தில் ஒரு தனித்துறையே இயங்கி வருகிறது. ஜீரணத்தைப்பற்றி அறிந்து கொள்ளும்போது மனித உடலின் எடை மாற்றத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். மனித உடலின் உடை அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். குறிப்பாக உணவு உண்டபின் எடை கூடுவதை அறியலாம். 300 ஆண்டுகளுக்கு முன்னமே இத்தாலியின் பதுவா நகரைச் சேர்ந்த டாக்டர் சாண்ட்ரியோ என்பவர் மனிதனது எடையின் ஏற்ற இறக்கங்களை பட்டியலிட்டார். 

உடலில் இருந்து கரியமில வாயு வெளியேறும் போது எடை குறைவதுண்டு. அதிக வியர்வை வெளிப்படும் போது எடை குறைவு நிறைவு நிகழ்வதுண்டு. நீர்ச்சத்து ரத்தத்தில் இருந்து வியர்வை சுரப்பிகளாலும், சிறுநீரகங்களாலும் உறிஞ்சப்படும் போது எடைக்குறைவு ஏற்படும். உடலில் எடை குறைந்தால் தேவையற்ற பல தொல்லைகள் இல்லாமல் போகும். வாழ்க்கை இனிமையாகும். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget