ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் ஹன்சிகா


ஆளே இல்லாத கடையில், யாருக்கோ டீ ஆத்தும் டயலாக், யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ, கோலிவுட் பப்ளிமாஸ், ஹன்சிகாவுக்கு, அப்படியே பொருந்தும். ஆம், இப்போது, கோலிவுட்டில், அவருக்கு போட்டியே இல்லை. அவருக்கு பெரும் போட்டியாக கருதப்பட்ட, அமலா பால், சமந்தா ஆகிய பியூட்டிகள், ஆந்திர வாலாக்களுடன் ஐக்கியமாகி விட்டதால், போட்டியே இல்லாமல், கோலிவுட்டில் கோலோச்சுகிறார், ஹன்சிகா.
ஆனால், அவருக்கு இப்போது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளார், பாம்பே ரசகுல்லா, காஜல் அகர்வால். "ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா போன்ற படங்களில் நடித்து வரும், காஜல், மும்பையில் முகாமிட்டபடியே, கோலிவுட் கதவுகளை, பலமாக தட்டிக் கொண்டிருக்கிறார். மேலும், சில தமிழ் படங்களின் ஹீரோயின் வாய்ப்பும், அவருக்கு கிடைத்துள்ளதாம். இதனால், இதுவரை, கோலிவுட்டில் தனி ராஜாங்கம் நடத்தி வந்த, ஹன்சிகா, பயங்கர கடுப்பில் இருக்கிறாராம்.

பழைய பதிவுகளை தேட