யுவன் (கீரிப்புள்ள) சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுபவர். சந்தியாவுக்கு(திஷா பாண்டே) கீரி மீது காதல். பணக்கார மைனர் ஒருவர் தெருவில் சந்தியாவைப் பார்த்துவிட்டு, மணந்து கொண்டே தீருவது என்று தீவிரம் காட்டுகிறார். சந்தியாவின் சித்தியும் இதற்கு உடந்தையாக இருக்கிறார். சந்தியா நிலைமையைக் கீரியிடம் விவரிக்க, கீரி சந்தியாவின் சித்தியிடம், தகராறு செய்கிறார்.
கீரியும் அவன் தோழர்களும் அக்காவாக மதிக்கும் அம்மு, ‘கீரியைச் சமாதானம் செய்து, சந்தியாவுடன் உன்னை நான் சேர்த்து வைக்கிறேன். பொறுமையாக இரு’ என்று கூறி, ஒரு வேலை விஷயமாகத் திருச்சி செல்கிறார்.
அங்கு போலீஸ்காரரின் பாலியல் பலாத்காரத்தால் மனமொடிந்து, தற்கொலை செய்து கொள்கிறார். செய்தி தெரிந்து திருச்சி வந்த கீரி அந்த போலீஸ்காரரைத் தாக்கிக் கொல்கிறார். அதே சமயம் சந்தியாவுக்கு அவசரக் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. அதிரடியாய் சந்தியாவை மீட்கிற கீரி, போலீஸ் துரத்தலிலிருந்து தப்பிக்க, நட்பு காட்டும் தாதா துரையிடம் (பெரோஸ்கான்) அடைக்கலமாகிறார். ஆனால், அவருடைய நிஜ முகம் வேறு மாதிரி இருக்கிறது. பிறகு என்ன நிகழ்கிறது என்பதை அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.