மொபைல் போன் நிறுவனமான நோக்கியா, அனைவரும் வாங்கக்கூடிய மிகக்குறைந்த விலை மொபைல் போனான "நோக்கியா 105" மொபைலை இந்திய சந்தையில் களமிறக்குகிறது. நோக்கியா 105 போன், முதல் முறை மொபைல் வாங்குபவர்களுக்கான அருமையான அறிமுகம் எனவும், இந்தியாவிலேயே மிகக்குறைந்த விலை கலர் மொபைல் எனவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோக்கியாவின் குறைந்த விலை மொபைலான நோக்கியா 1280 சந்தையில் மிகப்பெரிய ஹிட். இந்த மொபைல், வெளியிடப்பட்ட நாளிலிருந்து 100 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 105 மொபைல் உயர்தர வடிவமைப்பு மற்றும் தினசரி அத்யாவசியங்களான எப்.எம்.ரேடியோ, பேசும் கடிகாரம் மற்றும் ஒளிர்விளக்கு ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.1249 ஆகும்.
இதுகுறித்து நோக்கியா இந்தியாவின் தென் மண்டல பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவிக்கையில், இந்த மொபைல் உள்ளூர் சந்தையில் கருப்பு-வெள்ளை காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் கையாளுவதற்கு மிக எளிதான நோக்கியா 105, பழமையான அல்லது ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிராமல் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அனைத்து மக்களாலும் வாங்கத் தக்க, முதல் முறை மொபைல் வாங்குபவர்களுக்குப் பொருத்தமான மொபைல் என்று ஸ்ரீதர் தெரிவித்தார்.