தமிழில் குத்தாட்டமாடி கலக்கும் பாப் பாடகி அம்மணி

தமிழில் வளர்ந்து வரும் படம் சாய்ந்தாடு சாய்ந்தாடு. இந்த படத்தில் ஒரு அயிட்டம் பாடலை பாடுவதற்காக மும்பையிலிருந்து ஷிபானி காஷ்யப் என்ற பாப் பாடகியை அழைத்து வந்திருந்தனர். பாடலை தனது தாய்மொழியில் எழுதி வைத்துக்கொண்டு பாடிய அவர், பாடும்போதே செம ஆட்டம் போட்டாராம். அதோடு நடிகைகள் போன்று அம்மணி கவர்ச்சிகரமாகவும் இருந்ததால், இந்த பாடலுக்கு படத்தில் இவரையே ஆட வைத்தாலென்ன என்று
யோசித்த இயக்குனர், அதுபற்றி ஷிபானியிடம் கேட்க, உடனே சம்மதம் சொல்லி விட்டாராம்.

அதனால் பின்னணி பாடி முடித்த கையோடு ரெக்கார்ட்டி தியேட்டரில் இருந்து அவரை படப்பிடிபபு தளத்துக்கு அழைத்து சென்று விட்டார்களாம். ஏற்கனவே அவர் நடனம் தெரிந்தவர் என்பதால், நடன மாஸ்டர் சொல்லிக்கொடுத்த சில மூவ்மெண்டுகளை உள்வாங்கிக்கொண்டு இரண்டு நாட்களாக செமத்தியாக ஆடினாராம். ஒர்ஜினல் குத்தாட்ட நடிகைகளே ஆடிப்போகும் அளவுக்கு ஷிபானி காஷ்யப்பின் ஆட்டம் அமர்க்களமாக இருந்ததாம். ஆடி முடித்து விட்டு மும்பை பறக்கையில், அடுத்து நல்ல வாய்ப்பு ஏதாச்சு இருந்தாலும் சொல்லுங்கோ, உடனே பிளைட் பிடிச்சு பறந்து வந்துடுறேன் என்று கண்ணடித்து விட்டு சென்றாராம் அம்மணி.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget