
தேவயானிக்கு வழக்கறிஞர் வேடம் என்று சொன்னதாக ஞாபகம்.
காலமாற்றத்தில் கீர்த்தி சாவ்லாவின் கீர்த்தி மங்கியது. அதோடு போஸ்டரில் அவர் ஓரங்கட்டப்பட்டு தேவயானி வந்தார். படத்தின் கதை? பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கிற மாதிரியான கேரக்டராம் ராஜகுமாரனுக்கு. 'என் கணவர் எந்தப் படத்தை எடுத்தாலும் அதில் மெசேஜ் வைப்பார். இந்தப் படத்திலும் அப்படி ஒண்ணு இருக்கு' என்று பொடி வைத்து பேசினார் தேவயானி. விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் என்னய்யா மெசேஜ்? காதலின் ஆழத்தை சொன்னாராம். அடக்கடவுளே...
'திருமதி தமிழ் என்பதற்கு ராசகுமாரர் ஒரு விளக்கம் தந்தார். தமிழ் எவ்வளவு நாள்தான் கன்னியா இருக்கிறது? செம்மொழின்னு ஒரு செந்தூரம் வச்சிட்டோம்ல, அதனால்தான் நான் தமிழை திருமதியாக்கிட்டேன்'. அவர் கூற்றுப்படி, கன்னி தமிழ் கற்பிழந்த கதையாகவும் திருமதி தமிழ் இருக்கலாம்.
இந்தப் படத்துக்காக சோலார் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் ராசகுமாரர். அக்னி நேரத்தில் இப்படியொரு அணுகுண்டு பெயர்.
எஸ்.ஏ.ராஜ்மாரை கண்டு பிடித்து தூசி தட்டி அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்தான் இசை. வருகிற வெள்ளிக்கிழமை சோலார் ஸ்டார் வர்றார். தியேட்டால் ஏசி யை ரெடி பண்ணி வைங்கப்பா.