அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த பிரச்சினை பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப் பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.
அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாத த்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.
கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும். மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியதும் அவசியம்