
மீண்டும் சினிமாவில் முழுவீச்சில் இறங்கி விட்டார் அஞ்சலி. என்றபோதும் அவரைப்பற்றிய வெளியாகும் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அவர் ஒருவாரம் மாயமானதில் இருந்து அவருடன் நடித்த இளவட்ட நடிகர்கள் மீது சந்தேகம் கொண்டு விதவிதமான கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இதையெல்லாம் நினைத்து நான் கவலைப்படவல்லை என்கிறார் அஞ்சலி. அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு இப்படி கூறியிருக்கிறார்.
அதாவது, தன்னை கல்யாணம் செய்யும் ஆண்மகன், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வீராத் ஹோக்லி மாதிரி இருக்க வேண்டுமாம். காரணம், அவரை மாதிரி துருதுருவான ஆண்கள்தான் தனக்குப்பிடிக்கும். மேலும், அப்படி நான் கல்யாணம் செய்து கொள்ளும் ஆண், தினமும் ஷேவிங் செய்தால் எனக்கு சுத்தமாக பிடிக்காது. முகத்தில் சிறிய அளவு தாடி வைத்திருக்க வேண்டும. ஆனால், அதை அழகாக டிரிம் செய்திருக்க வேண்டும். ஒருவேளை எனக்கு வரப்போகிற கணவருக்கு தாடி வைக்கும் பழக்கமில்லை என்றால், என் விருப்பத்திற்காக அவரை சிறிய அளவில் அழகான தாடி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வேன் என்கிறார் அஞ்சலி.