குரு பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த நாள் எது?

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய குருவை முறைப்படி வழிபட்டால் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் வளம் பெறலாம். வேலைவாய்ப்பு வழங்குவதிலும், தடைப்படும் திருமணம் விரைவில் நடைபெறவும் உதவி செய்பவர் குரு பகவான். 

குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை அன்று விரதமிருந்து குரு பகவானுக்கு கொண்டை கடலை
மாலை அணிவித்து குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். 

அதுமட்டும் இல்லாமல் குரு பகவானை வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும், குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும். 

வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிடைப்பது நிச்சயம்.


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget