கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


1. சூது கவ்வும்
தொடர்ந்து அதே முதலிடத்தில். மூன்று வாரங்களில் 5.56 கோடிகளை வசூலித்திருக்கும் படம் சென்ற வார இறுதியில் 86 லட்சங்களையும், வார நாட்களில் 84.5 லட்சங்களையும் வசூலித்து இன்னும் நல்ல வசூலுடன் உள்ளது.

2. எதிர்நீச்சல்
தொடர்ந்து அதே இரண்டாவது இடத்தில்.
மூன்று வாரங்களில் 5.5 கோடிகளை வசூலித்துள்ளது. வார இறுதி வசூல் 57.8 லட்சங்கள். வார நாட்களில் 58.7 லட்சங்கள்.

3. நேரம்
தொய்ந்து போன திரைக்கதையால் சூது கவ்வும் போல வரவேண்டிய படம் மண்ணைக் கவ்வும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 3.7 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ
சத்யராஜும், மணிவண்ணனும் அவுட் ஆஃப் போகஸிற்கு போய் அதிக நாட்களாகிறது என்பதை நிரூபித்திருக்கும் படம். வார இறுதியில் 9.5 லட்சங்களையும் வார நாட்களில் 9.7 லட்சங்களையும் வசூலித்திருக்கிறது. இதுவரையான சென்னை வசூல் 34.3 லட்சங்கள் மட்டும்.

5. உதயம் என்எச் 4
சித்தார்த் நடித்திருக்கும் இந்த ரோடு மூவி ஐந்து வாரங்கள் முடிவில் 3.9 கோடிகளை வசூலித்திருக்கிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.03 லட்சம். வார நாட்களில் 2.5 லட்சங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget