ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 9

குறியீட்டுச் சிந்தனை

*  குழந்தைகள் தாங்கள் புரிந்துகொண்ட வார்த்தைகள், எண்கள், உருவங்கள் போன்ற குறியீடுகளை உள்ளத்தில் உபயோகப்படுத்தும் திறனே குறியீட்டுச் சிந்தனை எனப்படும்.

*  குழந்தைகள் இடைவெளி, காரண காரியம், அடையாளம் காணுதல், வகைப்பாடு செய்தல் மற்றும்
எண்ணுருக்கள் இவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி அடைகிறது.

*  குழந்தைகள் சிலவற்றை சிசுப் பருவத்திலிருந்தே புரிந்து கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். மற்றவை முன் குழந்தைப் பருவத்தில் வளர ஆரம்பிக்கின்றன. எனினும் பின் குழந்தைப் பருவம் வரை இந்த வளர்ச்சி முழுமை அடைவதில்லை.

*  குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு, மொழியால் கருத்துப்பரிமாற்றம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் குறியீட்டுச் சிந்தனையின் வெளிப்பாடுகளே ஆகும்.

*  பாவனை விளையாட்டில் குழந்தைகள் தங்களை மருத்துவர் போலவும், ஒட்டிநர் போலவும் உருவகப்படுத்தி கொண்டு விளையாடுகின்றனர்.

*  குழந்தைகளின் குறியீட்டுச்சிந்தனைக்கு எண்ணுருக்களும் எழுத்துக்களும் அவசியம். மொழியைப் பயன்படுத்தி குழந்தைகள் வார்த்தைகளைப் பேசுகின்றனர், கேட்கின்றனர்.

*  புலன் உணர்ச்சி அல்லது செயல் குறிப்பு இல்லாமல் மனத்தளவில் நடைபெறுவது குறியீட்டுச் சிந்தனையின் தன்மையாகும்.

*  குறியீட்டுச் சிந்தனையின் வளர்ச்சி தர்க்க முறை சிந்தனை ஆகும். தர்க்க முறை சிந்தனை என்பது குறியீடுகளில் வரிசைத் தொடரை ஏற்படுத்தி ஒரு முடிவையெடுத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும்.

*  ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிரமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று பியஜே குறிப்பிடுகிறார்.


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget