கர்ப்பிணிகளுக்கு மருத்துவரீதியான அறிவுரைகள்

கர்ப்பிணிகள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை பிறக்கும். சுகப் பிரசவம் ஆகும். 

கர்ப்பிணிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும். 

கர்ப்பிணிகள் மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது. 

அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது. 

மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது. 

மேல்நோக்கிப் படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும். 

கர்ப்பிணிகள் சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கா வலிப்பு ஏற்படும். 

சதா வருத்தத்துடன் உள்ளவர்களுக்கு பயப்படும் சுபாவம் உள்ள குழந்தை பிறக்கும். 

கர்ப்ப காலத்தில் பிறருக்கு கெடுதியை நினைத்தால் பிறக்கும் குழந்தை பிறரை இம்சிப்பவனாகவும், பொறாமை குணம் உள்ளதாகவும் இருக்கும். 

கர்ப்ப காலத்தில் சதா தூங்கிக்கொண்டே இருந்தால் பிறக்கும் குழந்தை சோம்பல் புத்திகுறைவு, அக்கினி பலம் குறைவு போன்ற குறைபாடுகளுடன் பிறக்கும். 

மதுபானம் கர்ப்பகாலத்தில் குடித்தால், பிறக்கும் குழந்தை சஞ்சல புத்தி உடையவனாக பிறக்கும். 

இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை சர்க்கரை வியாதி, ஊமைத்தன்மை, அதிக பருமன் ஆகியவை உண்டாகும். 

அதிக புளிப்பு சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு இரத்த பித்தம், தோல், கண் வியாதிகள் ஏற்படும். கசப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை உடம்பு உலர்ந்தும் பலம் குன்றியதுமாகவும் இருக்கும். துவர்ப்பு அதிகம் சாப்பிட்டால் கருத்த மேனியும், பொருமல் வியாதியும் உள்ள குழந்தை பிறக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget