மொபைல் பேங்கிங்கை பாதுகாப்பாக செய்வது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் மொபைல் பேங்கிங் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. விரல் நுனியில் அனைத்தையும் பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வங்கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இவை அனைத்தும் மொபைல் பேங்கிங் வழியாக செய்ய முடியும்.

1. உங்கள் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைக்கவும்.

2. செல்போனில் எஸ்.எம்.எஸ். அலர்ட் வருமாறு பதிவு செய்யவும்.

3. செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

4. செல்போன் அதிலும் குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள் பாதிக்ககூடிய ஆபத்து அதிகம்.

5. உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.

6. இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். (உதராணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை).

7. டெபிட்/கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை செல்போனில் பதிவு செய்ய வேண்டாம்.

8. உங்களது செல்போன் தொலைந்து போனால் மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள்.

9. மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மற்றுங்கள்.

10. வெளிப்படையான பாஸ்வேர்டுகளை (பிறப்பு பெயர், தேதி) பயன்படுத்த வேண்டாம்.

11. மொபைல் பேங்கிங்கின் போது பாதுகாப்பற்ற வை ஃபை இணைப்பை(Wi-Fi) பயன்படுத்த வேண்டாம்.

12. ப்ளூடூத்துடன் கூடிய சேவைகளை துண்டியுங்கள்.

எனினும், மேல்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget