ஆண்கள் சவரம் செய்த பின் ஏற்படும் சரும வறட்சியை தடுப்பது எப்படி

ஷேவிங் செய்த பின்னர் சருமத்தில் வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படுகிறதா? அதிலும் நல்ல தரமான ரேசர் மற்றும் க்ரீம் பயன்படுத்தினாலும், இந்த பிரச்சனை இருக்கும். இது ஆண்கள், பெண்கள் என அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான். அதிலும் பெண்களுக்கு கோடையில், இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதிலும் கைகள், கால்கள் மற்றும் மற்ற இடங்களில் தொடர்ந்து ஷேவிங் செய்வதால், சருமமானது வறண்டு, அரிப்பை
ஏற்படுத்தும்.
எனவே இந்த பிரச்சனை வராமல் இருக்க ஒரு சிறந்த வழியென்றால், ஷேவிங் செய்வதற்கு சருமத்தை சரியாக்குவது தான். அதற்கு ஷேவிங் செய்யும் முன்னும், பின்னும் சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்வது தான். இதனால் ஷேவிங் செய்வதால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனை குணப்படுத்த முடியும்.

இப்போது ஷேவிங் செய்த பின்னர் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி சரும வறட்சியை போக்குவதுடன், சருமத்தை அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, சருமத்திற்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின் ஜிஜோபா அல்லது அவகேடோ எண்ணெயை ஷேவிங் செய்த இடத்தில் தடவினால், சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் சிறிது புளித்த தயிரை ஊற்றி, ஷேவிங் செய்த பின்னர் சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.

சோளமாவில், தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஷேவிங் செய்து 15 நிமிடத்திற்கு பின்னர் சருமத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வீட்டிலேயே இயற்கையான ஒரு ஷேவிங் லோஷனை செய்வதற்கு, உலர்ந்த காம்ஃப்ரே இலைகள், காலெண்டுலா மலர்கள், ரோஸ் வாட்டர், ஹாசில் சாறு, கிளிசரின், லாவெண்டர் மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் உலர்ந்த இலைகள், மலர்களை, ஹாசில் சாற்றில் சேர்த்த, 2 வாரம் ஊற வைத்துக் கொண்டு, பின் மற்ற பொருட்களை சேர்த்து கலந்து, இந்த கலவையை சருமத்தில் தடவ வேண்டும். இந்த கலவையை ஒரு முறை செய்தால், 6 மாதத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் வறட்சியானது நீங்கிவிடும்.

கற்றாழை ஜெல்லும் வறட்சியைப் போக்கும் பொருட்களில் முக்கியமானது. அதற்கு கற்றாழையில் ஜெல்லை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும வறட்சி நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.

சொறி சிரங்கு உள்ளவர்களும், சரும வறட்சியால் அவஸ்தைப்படுவர்களுக்கும் சிறந்த ஒரு முறை தான் ஓட்ஸ் குளியல். அதற்கு ஓட்ஸை பொடி செய்து, ஒரு குளியல் தொட்டியில் உள்ள நீரில் சேர்த்து, அதில் 15 நிமிடம் உடலை ஊற வைத்து, பின் சாதாரண நீரில் குளித்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

ஷேவிங் செய்த பின்னர், தேனை சருமத்தில் தடவி ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் அலசி, 5 நிமிடம் கழித்து ஆப்பிள் சீடர் வினிகரை தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள காயங்கள் குணமாகி, சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பு நீங்கிவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget