படுக்கையறையில் TV பார்ப்பதால் வரும் பாதிப்புகள் - உங்களுக்கு தெரியுமா?

நாள் முழுவதும் மண்டைக் காய்ச்சலான வேலைக்குப் பின், வீட்டில் படுக்கையில் சாய்ந்தபடி டி.வி.யை மேய்வதைப் போல ரிலாக்ஸ் அளிப்பது எதுவும் இல்லை. 'பேச்சில ராக' இருந்தால் இது ஓ.கே.தான். ஆனால் திருமணமானவராய் இருந்தால்...? கொஞ்சம் தொடர்ந்து படியுங்கள். 

இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, படுக்கையறையில் டி.வி. இல்லாத தம்பதிகளுடன் ஒப்பிடும்போது, படுக்கையறையில் டி.வி. உள்ள தம்பதிகள் பாதி எண்ணிக்கையில் தான் 'உறவு' கொள்கிறார்களாம். ஆக, உங்களின் மனம் கவர்ந்த டி.வி., செக்ஸ் இன்பத்துக்கு வேட்டு வைத்துவிடுகிறது. 

இத்தாலிய ஆய்வு கூறும் முடிவை அப்படியே ஆமோதிக்கிறார், மும்பையைச் சேர்ந்த பாலியல் மருத்துவ நிபுணர் பிராம் பட், ''படுக்கையறையில் உள்ள டி.வி., உங்கள் செக்ஸ் வாழ்க்கையைச் சிதைத்து விடுகிறது. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் ஒரு டி.வி. வைப்பது இப்போது பேஷனாகிவிட்டது. 

அதன் விளைவு, தம்பதிகளுக்கு டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத் தான் நேரம் இருக்கிறதே தவிர, செக்சுக்கு அல்ல!'' என்கிறார். நிறுவனம் ஒன்றில் பொதுத் தொடர்பு அதிகாரியாக உள்ள ரித்திகா இப்படிக் கூறுகிறார், ''எனக்கு வீட்டில் ஹாலில் இருந்து டி.வி. பார்ப்பதை விட, படுக்கையில் வசதியாகச் சாய்ந்தபடி டி.வி. பார்ப்பது பிடிக்கும். 

ஆனால் பிரச்சினை என்ன வென்றால், எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் வேறு, என் கணவருக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் வேறு. எனவே படுக்கையறையில் நான் எனது பேவரைட் புரோகிராம்களை பார்த்து முடித்து படுப்பதற்குத் தயாராகும்போது, கணவர் செய்தி, ஆக்ஷன் படங்கள் பார்க்கத் தயாராகி விடுவார். 

அவர் அவற்றைப் பார்த்து முடிக்கும்போது நான் தூங்கியிருப்பேன். ஆக, செக்ஸ், கட்டிலுக்குக் கீழே ஓடிப் போய் ஒளிந்திருக்கும்!'' என்று உண்மையை ஒப்புக்கொள்கிறார். ஆனால் படுக்கையறையில் கொஞ்ச நேரம் ரிலாக்சாக டி.வி. பார்ப்பதில் தவறில்லையே? சொல்லப் போனால் 'அந்த' மாதிரியான படம் ஒன்றை பார்த்தால் 'மூடு' வருமே என்று சிலர் வாதிடுகிறார்கள். 

நிஜத்தில் அவ்வாறு நடப்பதில்லை என்பதே உண்மை. தனியார் நிறுவன அலுவலரான தானியா கூறுவதைக் கேளுங்கள்... ''சில நேரங்களில் நானும் 'அவரும்' டி.வி.டி.யில் செக்சியான படத்துக்குப் பிறகு 'அந்த' மனநிலைக்கு வந்துவிடுவோம். சரி, இன்னும் கொஞ்ச நேரம் நியூஸ் பார்த்துவிட்டு 'அதற்கு' போகலாம் என்று எண்ணுவோம். 

ஆனால் அதற்குள் எல்லாம் தணிந்து, அணைந்து போயிருக்கும்!'' என்று வெளிப்படையாக சொல்கிறார். பாலியல் நிபுணர் ராஜ், ''என்னிடம் ஆலோசனை கேட்டு வருகிறவர்களுக்கு நான் கூறும் அறிவுரை, படுக்கையறையில் இருந்து டி.வி.யை தூக்கி வெளியே எறியுங்கள் என்பதுதான். 

ஆனால் பலரும் அதைக் கேட்பதில்லை. டி.வி.யும் மதுபானம் போலத்தான். 'ஆசை'யைத் தூண்டும், ஆனால் செயல்பட விடாது. எனவே கட்டாயமாக டி.வி., பொது அறையிலேயே இருக்கட்டும். அப்போதுதான் நீங்கள் குடும்பத்தினருடன் அதைப் பகிர்ந்துகொள்வீர்கள். படுக்கையறை மாதிரியான, 'தனியாக' விரும்பியதைப் பார்க்கும் வசதி இருக்காது. 

நீங்கள் டி.வி. பார்க்கும் நேரமும் குறையும். நீங்கள் சராசரியாக ஒருநாளைக்கு 6 மணி நேரம் டி.வி. பார்க்கிறீர்கள் என்றால், அதை 3 மணி நேரமாகக் குறைக்கலாம். டி.வி.க்கு ஒதுக்கும் நேரத்தைக் குறைத்து, ஜோடியாக கழிக்கும் நேரத்தைக் கூட்டுங்கள்'' என்று அறிவுரை கூறுகிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget