குரு அமரும் இடமும் அதற்கான பலனும்

குரு முதல் பாவத்தில் லக்னத்தில் அமர்ந்தால் அவர்கள் அமைதியாகக் காணப்படுவார்கள். மற்றவர்களுக்குப் புத்திமதி சொல்லும் தகுதி இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வும் பெருந்தன்மையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமும் இவர்களிடம் காணப்படும். 

குரு இரண்டாம் பாவத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் அவர்கள் இனிமையாகப் பேசுவார்கள். ஏராளமாகக் சம்பாதிப்பபார்கள். வீடு, நிலம், பூமி, பொன்னா பரணங்கள் சேரும். வாகனவசதி உண்டாகும். நினைக்கும் காரியங்களை எளிதாகச் சாதித்துக் கொள்ள முடியும். 

குரு மூன்றாம் பாவத்தில் அமர்ந்தால் அவர்களிடம் சுயநலம் அதிகமாகக் காணப்படும். தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுடைய பிள்ளைகளே பகைத்துக் கொண்டு விரோதமாகக் செயல்படுவார்கள். 

மனதில் நிம்மதி இருக்காது. குரு நான்காம் பாவத்தில் அமர்ந்தால் நல்ல மனைவி அமைவாள். தாய்வழியில் சொத்துக் கிட்டும். தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். ஏராளமாக லாபம் கிட்டும். அசையா சொத்துகளும் பொன்னாபரணங்களும் சேரும். வாழ்க்கையில் பல வெற்றிகளை எளிதாகத் தேடிக் கொள்ள முடியும். 

குரு ஐந்தாம் பாவத்தில் அமர்ந்தால் அவர்கள் மதி நுட்பம் வாய்ந்தவர்களாகவும், தாராளமாக வருமானம் ஈட்டுபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்குத் திடீர் யோகம் அடிக்கும். பூர்வீகச் சொத்துகள் கிட்டும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். 

குரு ஆறாம் பாவத்தில் அமர்ந்தால் எதிரிகளை வீழ்த்தக் கூடிய மனோவலிமை இருக்கும். ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதைச் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். கம்பீரமாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் ஒரு நோயாளியாக இருப்பார்கள். நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை தொல்லை கொடுக்கும். 

குரு ஏழாம் பாவத்தில் அமர்ந்தால் இளம் பிராயத்தில் திருமணம் நடைபெறும். அதிர்ஷ்டமான மனைவி அமைவாள். அவள் மூலமாகச் சொத்து, சுகம் கிட்டும். நல்ல கல்வியறிவும் மதிநுட்பமும் பெற்றிருப்பார்கள். வளமான வாழ்க்கை அமையும். செல்வாக்கைப் பயன்படுத்திப் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். 

குரு எட்டாம் பாவத்தில் அமர்ந்தால் ஆயுள் பலம் சிறப்பாக இருக்கும். ஆனால் நிம்மதி இருக்காது. வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். அடிக்கடி பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். எதுவுமே நினைப்பது போல் நடக்காது. மனதில் விரக்தி மனப்பான்மை ஏற்படும். வாழ்க்கையே வெறுத்துப் போகும். 

குரு ஒன்பதாம் பாவத்தில் அமர்ந்தால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்ப்பதைவிட அதிக இலாபம் கிட்டும். வீடு, நிலம், பூமி, பொன்னாபரணங்கள் சேரும். வாகன வசதி உண்டாகும். வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும். தந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்வார். 

குரு பத்தாம் பாவத்தில் அமர்ந்தால் அவர்களுடைய மனதில் தெய்வ பக்தி நிறைந்திருக்கும். நல்ல கல்வியறிவைப் பெற்றிருப்பார்கள். தாராளமாக வருமானம் ஈட்டுவார்கள். செலவுகளுக்கும் பஞ்சமிராது. செல்வத்துடன் செல்வாக்கு அதிகமாகும். உயர் பதவிகள் தேடிவரும். 

குரு பதினொன்றாம் பாவத்தில் அமர்ந்தால் இசை, நடனம் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை வசதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். நல்ல நண்பர்கள் கிட்டுவார்கள். மூத்த சகோதரர்கள் வசதியாக வாழ்வார்கள். 

சொத்து, சுகங்கள் சேரும். குரு பன்னிரண்டாம் பாவத்தில் அமர்ந்தால் ஏராளமாகச் சம்பாதிப்பார்கள். தாராளமாகச் செலவழிப்பார்கள். மனைவிக்கு அடங்கி நடப்பார்கள். வாழ்க்கையிலும் மனதிலும் நிம்மதி இராது. பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு உல்லாசமாக வாழ்வார்கள். பொருள் விரயம் ஏற்படும்.

பழைய பதிவுகளை தேட